உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


பட்டிருப்பது உண்மையானால்,

அந்தச் சக்தியின் பெயரால் வெட்ட வெளியில் விரிவாக இருக்கின்ற இறைவனை,

மாலையிலே மவுனமாக இருக்கின்ற இறைவனை - நான் ஒரு கேள்வி கேட்பேன்

அதற்கு அவன் பதில் கூறியே ஆகவேண்டும் - அல்லவா? இல்லை என்றால் என்ன பணி பகுத்தறிவுக்கு - அல்லது ஆன்மிகத்துக்கு?

மார்ட்டின் லூதர் கிங்கை இழந்து உலகம் மழையாகத் தேம்புகின்றது! மின்னலாக வெம்புகின்றது! - உத்தமர்கள் இறந்து கொண்டே போகின்றார்கள் என்பதால்!

உதவாக்கரைகள் - ஊர் கெடுப்பவர்கள் -மோசடிக்காரர்கள் - திடீர்க் கோடீஸ்வரர்கள் உயிரோடு உலா வருகின்றார்கள்! ஜால்ரா தட்டிகளும் அதற்கு உண்டு!

ஏன் தெரியுமா? எப்படியும் வாழலாம் என்ற இந்த ஈன மலக் குடலைக் கழுவும் கயமைச் சூழ்நிலையால் அல்லவா?

சனியன் பூமியிலே இருக்கும் - சந்நிதானம் சாவுக்குப் பின்னாலே இருக்கும்.

முப்பத்தொன்பது வயதிலே உலகப் புகழை அள்ளிக் கொண்டு சென்று விட்ட பூத் இருந்த உலகத்தில், அவருக்கு எதிராக துப்பாக்கி நீட்டிய கயவனும் இருக்கின்றானே! இதுதானே, காலத்தின் மறம்?

"முற்பகல் செயின் பிற்பகல் விளையும்' என்ற ஒளவை அறிவுரை பலித்து விட்டதே - பார்த்தீர்களா?

மார்ட்டின் லூதர் கிங்கை 1968- ஆம் ஆண்டு அமெரிக்கா மெம்பீஸ் நகரில் ஜேம்ஸ் எர்ல் ரே என்பவன் கொலைக்காகத் துப்பாக்கியை தூக்கினான். 'வாளெடுத்தவன் வாளாலே சாவான்' என்ற இயேசு வாயுரைக்கு சான்றாவோமே என்பதைச் சிந்திக்கவே மறந்து விட்டானே!

சாவு என்பது உத்தமர்களுக்கு அராஜகமாக வருகின்ற காரணத்தினால்தான், இந்த உலகம் பெருமை அடைகின்றது

87