பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51


லானான். புயல் வீசலாயிற்று! கான்சினியின் தயவால் பெரும் பதவிகளில் அமர்ந்திருந்தவர்கள், வேலையினின்றும் நீக்கப்பட்டனர். கான்சினியால் சிறை வைக்கப்பட்டவர்கள், விடுதலை செய்யப்பட்டு, பதவிகளில் அமர்த்தப்பட்டனர். பல துறைகளிலே திடீர் மாறுதல் வியனோரா சிறையில் தள்ளப்பட்டாள்.. மேரியின் அமுல் அடக்கப்பட்டுவிட்டது. எல்லாம் இப்போது லைனிஸ் கரத்தில்!

மன்னனை மக்கள் பாராட்டினர். ஏதுமறியாதவர் போலிருந்தாரே, இப்போது இவ்வளவு ஆற்றலுடன் காரிய மாற்றுகிறாரே, என்று கூறி மக்கள் மகிழ்ந்தனர். கான்சினியிடம் மக்களுக்கு அவ்வளவு வெறுப்பு. இவனது கொட்டத்தை அடக்கும் துணிவு யாருக்குமா இல்லை, என்று மக்கள் பல காலமாகக் கேட்டுவந்தனர். வேட்டை விளையாட்டில் ஈடுபட்டு,ஆட்சியிலே இருப்பவர்கள் எது செய்தாலும் அக்கரை காட்டாது இருந்து வந்த இந்த ஊமை மன்னன், மக்களின் மனப்போக்கை அறிந்து, மாபாவியைக் கொன்றானே, இதல்லவா ஆச்சரியம் என்று பேசினர்.

கான்சினியின் பிணம் பிய்த்தெறியப்பட்டது. ஆளுக்கொரு துண்டு எடுத்து அங்கும் இங்கும் போட்டுக் கொளுத்தினர்--சாம்பலை, காற்றோடு கலந்தனர், களிநடம் புரிந்தனர். கான்சினி ஒழிந்தான், மன்னன் வாழ்க! இத்தாலிய எத்தன் ஒழிந்தான், வீர இளைஞன் வாழ்க! என்று வாழ்த்தினர்.

கான்சினியுடன் தொடர்பு கொண்டோர், மேரியின் தயவுக்குப் பாத்திரமானோர், இவர்களுக்குப் பேராபத்து தாக்கியபோது, தப்பிப்பிழைத்தது. ரிஷ்லு, மட்டுந்தான்! எப்படி?

கான்சினியின் தயவைப்பெற ரிஷ்லு தவறவில்லை-மேரியின் ஆதரவால்தான், ஆட்சிக்குழுச் செயலாளராக அமர்ந்திருந்தான். எனவே மன்னனுக்கும் லைனிசுக்கும் மாற்றுக் குழுவிலே இருந்த ரிஷ்லு, ஒழித்துக் கட்டப்பட வேண்டிய புள்ளிதான், எனினும், லைனிஸ், மன்னனிடம் "ரிஷ்லு யோக்யர்! தங்களிடம் நிரம்பப் பற்று உள்ளவர்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/51&oldid=1549033" இலிருந்து மீள்விக்கப்பட்டது