பக்கம்:அரசியர் மூவர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 ☐ அரசியர் மூவர்



தமிழ்ப்பெண்கள் கடமையின் எதிரே அன்புக்கு இரண்டாம் இடந் தான் தருவர்,' என்ற ஓர் உண்மையைக் கோசலை மூலம் நன்கு வெளியிடுகிறான் கம்பநாடன். கைகேயி மூன்று நிலைகளிற் காட்சியளிப்பது போல இல்லாமல் எல்லா நேரத்திலும் ஒரு படியாகவே காணப்படுகிறாள் கோசலை. வயதால் ஏனைய இருவருக்கும் மூத்துள்ள அவளுடைய இச்செயல் மிகவும் பொருத்தமானதே என்று அறிந்து மகிழ வேண்டியுளது.

எனவே, தசரதன் முதல் தேவியாகிய கோசலை அனைத்துப் பண்பாடுகளும் நிறைந்தவள் என்பதும், தாய்மையைத் துறந்து கடமையை நிறைவேற்றிய கற்புடைய மடவாள் என்பதும் நன்கு விளங்குகின்றன அல்லவா? - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/124&oldid=1496818" இலிருந்து மீள்விக்கப்பட்டது