பக்கம்:அரசியர் மூவர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேகயன் மடந்தை 41


கிறது. இதற்கு ஒரு காரணமும் உண்டு. மனைவி கணவனிடம் கேட்கும் அனைத்தையும் கணவன் தந்து தீரவேண்டும் என்ற இன்றி யமையாமை இல்லை.

முன்னரே தருவதாக உறுதி கூறப்பெற்ற பொருளாயினும், கணவன் மனைவி என்ற உறவுமுறை பற்றிக் கணவன் இப்பொழுது அதனைத் தர மறுத்துவிடினுந் தவறு இல்லை. ஆனால், மன்னன் நிலை வேறு. சொன்ன சொல்லை எவ்வாறாயினும் காக்க வேண்டிய கடப்பாடு அரசனுக்கே உண்டு. எனவே, கைகேயி தசரதனுக்கு இக் கடமையை நினைவூட்ட வேண்டிப்போலும் மன்ன என்று விளித் தாள் இதையும் அம்மன்னன் அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை. “வரங்கொள இத்துணை மம்மர் அல்லல் எய்தி இரங்கிட வேண்டுவதில்லை,”(1502) என்று அவன் கூறும் அடுத்த வார்த்தைகள் அவன் பைத்தியக்காரத் தனத்தை நன்கு விளக்குகின்றன.

சீதை கேள்வன்

இவ்வளவு நம்பிக்கையையும் அன்பையும் தன் மாட்டுக் கொண்டுள்ள அரசனுக்குப் பெரியதொரு வருத்தத்தைத் தரப் போகிறோமே என்ற கவலை கைகேயிக்கு இருந்ததாகவே தெரிய வில்லை. கவலைப்படுபவளாக இருப்பின், அவள் மெள்ளத் தயங்கித் தயங்கியே தன் கருத்தை வெளியிட்டிருப்பாள். ஆனால், அவ்வா றல்லாமல் மிக விரைவில் தன் கருத்தை ஒரே வாக்கியத்தில் முடித்து விடுகிறாள்.

'ஏய வரங்கள் இரண்டில் ஒன்றி னால்என்
சேய்உலகு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றின்
போய்வனம் ஆள்வது எனப்பு கன்று நின்றாள்
தீயவை யாவையினும்சிறந்த தியாள்.” (1504)

என்ற இப்பாடலில் முதல் மூன்று அடிகளே அவளுடைய சொற்கள். 'ஒரு வரத்தால் என் பிள்ளை உலகாளவும், மற்றொன்றால் சீதை கணவன் வனம் ஆளவும் வேண்டும், என்றாள். இராமனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/43&oldid=1497076" இலிருந்து மீள்விக்கப்பட்டது