உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

ஐந்து பேர்களில் ஒருவர் பெண், மேலும் 24 அரிஜன வீடு களுக்குத் தீ வைத்தார்கள். அதோடு நான்கு பிணங்களை அந்தத் தீயில் விட்டெறிந்தார்கள். இவ்வித சம்பவம் ஏற்பட்டதற்கு

உடனடியான காரணம் அப்பகுதியில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் திரு. முத்துராமலிங்கத் தேவரை பாராட்டிப் பாடிய பாட்டுக்களை அப்பகுதியிலுள்ள அரிஜன மக்கள் எதிர்த்தார்கள் என்பதே. இந்தச் சம்பவம் நடந்தவுடன் அரிஜன மக்கள் எல்லாம் கோபம் கொண்டு திரண்டு எழுந்தார்கள். தேவர்களைத் தாக்கினார்கள். மூன்று பேர்களைக் கொலை செய்தார்கள். அவர்களில் இரண்டு பேர் பெண்கள். அவர்களுடைய வீட்டுக்கும் தீ வைத்தார்கள். அதோடு பிணங்களை அந்தத் தீயில் விட்டெறிந்தார்கள்." "செப்டம்பர் 14-ம் தேதி காலையில் ஓரக்குடி கிராமத்தில் தேவர்களுக்கும், அரிஜன மக்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அதில் நான்கு பேர் காயமுற்றனர். அதே நாளில் கீழ்த்தாவல் என்ற கிராமத்திற்கு இமானுவேல் கொலை வழக்கு சம்பந்தமாக குற்றவாளிகளைத் தேடுவதற்காகப் போலீஸ் பார்ட்டி சென்றபோது நூற்றுக்கணக்கானவர்கள் அடங்கிய ஒரு கூட்டம் போலீசைத் தாக்கியது. போலீஸ் பார்ட்டி தப்பித்துக் கொள்வதற்காகச் சுட்டார்கள். அதில் ஐந்து பேர், மறவர்கள் கொல்லப்பட்டனர்” இது அன்றைய போலீஸ் அமைச்சர் அவர்களின் வாக்குமூலம். ஆனால் ஐந்து மறவர்கள் கட்டி வைக்கப்பட்டு சுடப்பட்டார்கள் என்பது எதிர்த்தரப்பிலுள்ள வாதம். “1957 செப்டம்பர் 16-ந் தேதி காலை 6 மணிக்கு இலஞ்சம்பூர் என்ற இடத்தில் உள்ள தேவர்களுக்கும் வீராம்பள் என்ற இடத்திலுள்ள அரிஜன மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதில் நான்கு தேவர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் பெண், இரண்டு அரிஜன நபர்களும் கொல்லப்பட்டனர்”. அரிஜன நபர்களும், இரண்டு தேவர்களும் காயம் அடைந்தனர். அதே நாளில் ஆயுதம் தாங்கிய கூட்டமொன்று இருளாண்டிப்பட்டி, சேந்தகோட்டை முதலிய கிராமங்களிலுள்ள சுமார் 60 வீடுகளைக் கொளுத்தினர். இதில் மூன்று அரிஜன நபர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் பெண். ஒரு அரிஜன பெண் அபாயகரமான முறையில் காயம் அடைந்தார். “1957- 17-ம்