உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

109

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியிலே நல்லவர்கள் இருக்கிறார்கள், நாணயமானவர்கள் இருக்கிறார்கள், நேர்மையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் தலை யிட்டு இந்தக் காரியங்களுக்கு ஒரு முடிவு காண வேண்டும்.

நான் முதலமைச்சரானதையொட்டி கறுப்புப் பார்டர் கட்டி “கெட்டகாலம்” என்று தலையங்கம் எழுதப்படுகிறது. பரவாயில்லை. கருணாநிதி காரில் 'கருமாதி' சங்கு!! என்று தலைப்புக் கொடுத்து எழுதப்பட்டது. பரவாயில்லை. அவர்கள் கூறினார்கள், 'நீங்கள் வளர்த்துவிட்டது உங்களையே தாக்கும்' என்று. நீங்கள் வளர்த்து விட்டவர்கள் உங்களையே தாக்கி இருப்பதை நான் காட்டுகிறேன். கருணாநிதியின் தூதராக பக்தவத்சலம் போனார்”- இது தலைப்பு. 'கருணாநிதியின் அமைச்சரவையில், அவருக்குக் கீழே அமைச்சராக இருக்க மறுத்த நெடுஞ்செழியனைச் சரிக்கட்டி, எப்படியாவது தன் மந்திரிசபையில் உட்கார வைத்தால்தான் கழகம் பிழைக்கும் என்று கருணாநிதி அதற்கான வேலைகளைச் செய்துள்ளார்

பலரைத் தூது அனுப்பி, நெடுஞ்செழியனைச் சரிக்கட்டும் வேலை நடந்துள்ளது.

அதிலே ஒரு தூதுவர்- பழைய முதல் மந்திரி பக்தவத்சலமாம்!

'காலக்கொடுமை'- "பக்தவத்சலத்திற்கு சென்னையில் இப்போது இந்த வேலைதான் இருக்கிறது." அடுத்து வருத்தமான எவ்வளவு அசிங்கம் பாருங்கள்? 'ராம தூதுவர்' என்பதைப் போல கருணாநிதியின் தூதுவராக நெடுஞ்செழியனிடம் பக்தவத்சலம் போய் 'சமரசம்' பேசியும்கூட, அவர் கண்டிப்பாக மந்திரிசபையில் சேர மறுத்து விட்டாராம்! தூதுவரையும் அனுப்பி விட்டாராம்!

பாவம் மந்திரி வேலை போனபின்பு, மந்திரிக்குத் தூது போகும் வேலையாவது நமது பழைய முதல்வருக்கு கிடைத்ததே என்று அமைதி கொள்வோமாக!”