உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

141

நடத்தியதாகச் சொல்லப்படுவது. அதிகத் தொகைக்கு டெண்டர் கொடுத்தவர்கள் உபயோகிப்பதாகச் சொன்ன சுழற்சிக் குழாய்கள் தரம் பற்றியும் நீடித்த உழைப்பு பற்றியும் அரசு அக்கறை காட்டவில்லை” என்பதாகும்.

இதற்குப் பதில் குறைவான டெண்டர் கொடுத்த வர்களோடுதான் அவர்களின் டெண்டரைப்பற்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது விதிமுறைகளில் தலையாயது. குறைவான டெண்டர் நிராகரிக்கும் வரையில் மற்ற டெண்டர் கொடுத்தவர்களோடு எந்தவிதமான பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வது ஆட்சேபகரமானது. ஒழுங்குமுறைக்குப் புறம்பானது. நாம் கடைக்கொண்ட முறையில் பரிசீலனை செய்த விதத்தில் யாதொருவிதமான தவறும் இல்லை.

அடுத்த குற்றச்சாட்டு "குறைவான டெண்டர் கொடுத்தவர் களோடு அரசு பேரம் நடத்தியபோது நூற்று எண்பது இலட்சம் ரூபாய்க்கான அந்நியச் செலாவணியை நூற்று இருபது லட்சமாகக் குறைத்துக்கொள்ள அந்த டெண்டர் கொடுத்தவர்கள் சம்மதித் தார்களாம். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை போட்டார்களாம். பதினைந்து கோடியே 60 லட்சத்துக்கான தங்களுடைய டெண்டர் தொகையில் மேலும் தொண்ணூறு லட்சத்தை உயர்த்திக்கொடுக்க அரசு ஒப்புக்கொண்டால், அந்நியச் செலாவாணித் தேவையினை நூற்று இருபது லட்சமாகக் குறைத்துக்கொள்ளச் சம்மதித்தார் களாம்” என்பதாகும்.

இது உண்மைதான். குறைவான டெண்டர் கொடுத்த திருவாளர்கள் சத்தியநாராயணா பிரதர்ஸ் ரூபாய் 181 லட்சம் அந்நியச் செலாவணி கேட்டிருந்தார்கள். குழாய்களும், ரப்பர் வளையங்களும், வார்ப்படங்களும் தயார் செய்வதற்கு வேண்டிய தளவாடங்களும் யந்திரங்களும் இவைகளைத் தயார் செய்யக்கூடிய பொறியியல் நிபுணர்களையும் அந்நிய நாடு களிலிருந்து கொண்டுவருவதற்கு வேண்டி இந்தத் தொகையைக் கேட்டிருந்தார்கள். மத்திய அரசு நமது வீராணம் குடிநீர் திட்டத்திற்கு அனுமதி அளிக்கின்ற சமயத்தில், நமது திட்டம் நிறைவேறுவதற்கு வேண்டிய அந்நியச் செலாவணி எவ்வளவு தூரம் குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டும்