உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

145

இப்படி பொதுவாகக் கூறப்பட்ட பெரிய குற்றச்சாட்டு களுக்கு எல்லாம் நான் விளக்கம் தந்திருக்கிறேன். மற்றவற்றுக்கு அவ்வப்போது அமைச்சர்கள் எடுத்துக் கூறினார்கள்.

தொழிலாளர்களுக்குரிய சாதனைகளைப் பற்றி திரு. சங்கரய்யா பேசினார்கள். அவர்களது பேச்சில் பெரும்பகுதி போலீஸ் துறையைப் பற்றிய கண்டனம் இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிலாளர் கொள்கை சரியாக இல்லை என்று எடுத்துச் சொன்னார்கள்.

தொழிலாளர்களைப் பொறுத்தவரையிலும் இந்த அரசு வேலை வாய்ப்பை அளிப்பதில் 1969-ம் ஆண்டில் மின்வாரியம், பொதுப்பணித் துறை ஆகியவற்றில் 430 பேருக்கு வேலைகள் அளித்திருக்கிறது. 1967-ம் ஆண்டில் 44,875 பேர்களுக்கும், 1968-இல் 41,581 பேர்களுக்கும், 1969-இல் 42,770 பேர்களுக்கும் தொழில் தேடித்தரும் ஸ்தாபனத்தின் மூலம் வேலைகள் வாங்கித்தரப்பட்டு இருக்கின்றன. இவர்களில் 5,024 பேர்கள் டிப்ளமா பெற்றவர்கள்; 2,315 பேர் எஞ்சீனியரிங் பட்டதாரிகள். 3,739 பேர் சிறுதொழில் கற்றவர்கள்.

தொழில்துறையில் மூடப்பட்டிருந்த 35 ஆலைகளில், 17 ஆலைகளை இந்த அரசு 1969-ஆம் ஆண்டில் மீண்டும் திறந்துள்ளது. இதில் நான்கு ஆலைகளை தமிழ்நாடு பஞ்சாலைக் கழகமே மேற்கொண்டுள்ளது. இதனால் பத்தாயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வசதி கிட்டியுள்ளது என்பதில் இருந்தே திராவிட முன்னேற்றக் கழக அரசு தொழிலாளர்கள் அரசுதான் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 'வளர்க தொழில், வாழ்க தொழிலாளர்' என்பதும், தொழிலாளர், அரசு, தொழில் அதிபர்கள் பேச்சுவார்த்தை மூலம் குறைகளைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்பதும்தான் இந்த அரசின் கொள்கையாகும்.

என்பதற்கு

இது தொழிலாளர்களுடைய அரசு அடையாளமாக மே தினத்தைக் கொண்டாட வேண்டுமென்று ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுமுறை நாளாகச் செய்து இருப்பது இந்த திராவிட முன்னேற்றக்கழக அரசு என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

6-க.ச.உ.(அ.தீ.) பா-2