உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

கைத்தட்டல்). இந்த அவையில் நம்பிக்கை கோருகின்ற தீர்மானத்தை ஏன் கொண்டுவரவேண்டுமென்ற வினாவினை ஸ்தாபன காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் மதிப்புமிக்க நாடார் அவர்கள் இங்கு மீண்டும் ஒருமுறை எழுப்பினார்கள். சுலபமாக இதற்கு விடை

காணலாம்.

அதைக் கொண்டுவந்த காரணத்தாலேதான் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் டாக்டர் ஹாண்டே அவர்களும், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் திரு.பொன்னப்ப நாடார் அவர்களும் இங்கே பல பிரச்சனைகளைப்பற்றி விவாதிக்க முடிந்தது. அதைவிட வேறு ஒரு பெரிய காரியத்திற்கு என்று கருதி இத்தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. காங்கிரஸ் கட்சித்தலைவர் அவர்களும், உறுப்பினர்களும், அதைப்போலவே சுதந்திராக் கட்சித் தலைவர் அவர்களும், உறுப்பினர்களும், இந்த மன்றத்திலே இருக்கின்ற தோழமைக் கட்சி உறுப்பினர்களும், தலைவர்களும் அதைப் போலவே கம்யூனிஸ்ட் கட்சி, அண்ணா தி.மு.க., ஆளும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் இந்த நம்பிக்கை கோருகின்ற தீர்மானத்தின் மூலம் அவர்கள் இந்த அரசின்மீது எவ்வளவு குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்களோ அதற்கான நல்ல வாய்ப்பினை தாராளமாக வழங்கவேண்டுமென்ற அடிப்படைக் கருத்தின் காரணமாகத்தான் இந்த நம்பிக்கை கோருகின்ற தீர்மானம் முன்மொழியப்பட்டு, இந்த மாமன்றத்தில் நான்கு நாட்களாக காரசாரமான விவாதமாகவும் கருத்துக்கள் நிறைந்த விவாதமாகவும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விவாதத்திலே கலந்துகொண்ட மாண்புமிகு உறுப்பினர்கள் 24 பேர்களுக்கும் நான் என்னுடைய நன்றியையும் என்றாலும், அவை எங்களுடைய உள்ளங்களை ஓரளவு புண்படுத்தக்கூடியதாக அமைந்திருந்தாலும் நாங்கள் அவைகளை எல்லாம் இந்த மாமன்றத்திலே எப்படி விவாதிக்கவேண்டுமென்ற உணர்வைப் பெற்றவர்கள். இதுபோன்ற தாக்குதல்களைத் தாங்கும் பண்பாடு உள்ளவர்கள் என்ற காரணத்தினால் அவைகளை வரவேற்கிறோம், அதற்கேற்ற வகையிலே அமைச்சர் பெருமக்களும் அவர்களுடைய விளக்கங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நம்பிக்கை கோருகின்ற தீர்மானத்தை ஏதோ உள்நோக்கத்தோடு கொண்டுவந்திருக்கிறோம் என்று திரு.பொன்னப்ப நாடார் அவர்கள் குறிப்பிட்டார்கள். நான் அவர் களுக்குத் தெரிவித்துக்கொள்வேன், எந்த உள்நோக்கத்தோடும் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. நம்பிக்கை இல்லாத்