உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நாகரீகத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்குமே கடைப்பிடித்துவரும் என்பதை மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்திச் சொல்லிக்கொள்கிறேன்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த இந்த ஐந்தாண்டு காலத்திலே என்னென்ன செய்திருக்கிறோம், என்னென்ன செய்யத் தவறிவிட் டோம் என்பதை எல்லாம் மாண்புமிகு உறுப்பினர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும், தேர்தல் நேரத்திலே மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையா? இந்தியாவிலே இருக்கிற பல்வேறு மாநிலங்களோடும் தமிழகத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தமிழ் நாட்டில் கடந்த காலத்தில் ஏற்பட்டிருந்த வளர்ச்சிக்கும் இன்றைக்கு கழக அரசு வந்த பிறகு ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டினையும் உணர வேண்டும்.

இந்தியாவில் வெள்ளையர் ஆட்சிக் காலத்திலேயே ஒருசில மாநிலங்கள் நல்ல வளர்ச்சி பெற்றிருந்தன. அந்த மாநிலங்களிலே ஒன்று மராட்டிய மாநிலம் என்பதை நாம் எல்லாம் நன்கறிவோம். நம்முடைய தமிழ்நாட்டிலே 20 ஆண்டுக்காலம் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அதற்குப் பிறகு 1967-ம் ஆண்டிலே எங்களை எல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். பேரறிஞர் அண்ணாவின் வழியைப் பின்பற்றி இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு தமிழகத்தை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்போமானால், தமிழகத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதை உணர முடியும். இங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, சமுதாயத்தின் அடித்தளத்திலே இருக்கின்ற மக்களுக்கு பிற்பட்ட சமூகத்தினருக்கு, ஏழை எளிய மக்களுக்கு, பாட்டாளி மக்களுக்கு, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு ஏராளமான நன்மைகள் செய்யப்பட்டிருக்கின்றனவா இல்லையா என்பதை எண்ணிப் பார்த்திட வேண்டும். ஒரு அரசு நல்ல அரசா இல்லையா என்பதற்கு எது அளவுகோல்? நம்முடைய டாக்டர் ஹாண்டே அவர்கள் கேட்டார்கள். உள்ளே இருக்கின்ற பெரும்பான்மை உறுப்பினர்களை வைத்துக் கொண்டு உங்களுக்கு பெருத்த ஆதரவு இருக்கிறது என்று எண்ணிவிட முடியாது. நாட்டிலே இருக்கின்ற மக்களில்-வெளியே இருக்கிறவர்களில் 100-க்கு 90 பேர் அல்லது