உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் இங்கு பொறுப்பேற்றுக்கொண்ட நேரத்திலே இந்த மன்றத்திலே நிதிநிலை அறிக்கையை வைத்துவிட்டு, பதிலுரை பகர்கின்ற நேரத்தில் அண்ணா அவர்கள் சொன்னார்கள், “என்னுடைய அரசு தமிழகத்தில் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்கள், பின்தங்கிய மக்கள், நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் அவர்களுடைய வாழ்க்கையை அடிப்படையாக வைத்துத் திட்டங்களைத் தீட்டும்” என்று சொன்னார்கள்.

தமிழ் தழைக்க, தமிழ்க் குலம் செழிக்க என் அரசு பாடுபடும் என்று எடுத்துக்காட்டினார்கள். அவர் காட்டிய வழியில் நின்று நாங்கள் பணியாற்றுகிறோமா இல்லையா?

·9.46

சென்னை இராஜ்யம் என்ற பெயர் அண்ணா அவர்கள் காலத்தில் தமிழ்நாடு என்று தனக்கே உரிய பெயரைப் பெற்றது. இந்த மாமன்றமே அன்றைக்கு மகிழ்ச்சிக் கடலில் ஆழ, இன்றைக்கு மைசூர் மாநிலத்தவர்களும் நம் வழியைப் பின்பற்ற அன்றைக்கே சென்னை இராஜ்யம் என்ற பெயர் மாற்றப்பட்டு நாம் பிறந்த மண்ணுக்கு, தமிழ்நாடு என்கிற பழைய பெயர், நம்முடைய இலக்கியங்களில் காணப்படுகின்ற பெயர், நம் உரிமையைக் காக்கின்ற பெயர் சூட்டப்பட்டது. 1937-ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ முப்பது, முப்பத்தைந்து ஆண்டுக் காலமாக நடைபெற்றுவந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு முடிவு காணுகின்ற வகையில் அண்ணன் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில்-இன்றுமட்டுமன்றி இனிமேல் தமிழ்நாட்டில் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டுக்கும்தான் இடம், தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் இந்தி மொழிக்கு இடமில்லை என்கிற தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியதும் இதே மன்றத்தில்தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் என்பதை மறந்துவிட முடியாது.

சுயமரியாதைத் திருமணம் என்கிற சமுதாய சீர்திருத்தத் திருமணங்களைச் சட்டப்படி செல்லுபடியாகத்தக்கதாகச் செய்ய வேண்டும் என்பதாக எதிர்வரிசையில் இருந்து நாங்கள் கூறி வாதிட்டுவந்த நேரத்தில் எல்லாம் அப்போதிருந்த ஆட்சியாளர் களால் அது புறக்கணிக்கப்பட்டது. நாங்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகுதான் அண்ணன் அவர்கள் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற புரட்சிகரமான கருத்துக்குச் சட்டவடிவம் கொடுத்ததும்-இந்த