172
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
ஆண்டில் அரிசன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, ஒதுக்கப்படுகிற தொகை ரூ 81/2 கோடி. இந்த அரசு அரிசனங்களுக்கு என்ன செய்தது, அரிசன மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள் என்றெல்லாம் கேள்விக்கணைகளை மேடையிலேயிருந்து அரசியல்வாதிகள் எங்களை நோக்கி விடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவேளை, நான் பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்கின்ற காரணத்தால், அரிசன சமுதாயத்தை மறந்து விட்டேன் என்கின்ற பழியை என்மீது போடவேண்டுமென்று எண்ணி பின்தங்கிய சமுதாயத்திற்குத்தான் நான் பாடுபடுகிறேன் என்கிற குற்றத்தைச் சாட்டுவதற்காக அந்தப் பெரியவர்கள் அரசியல் ரீதியில் தாக்க முற்பட்டிருக்கிறார்கள். ஆனால் அன்று நண்பர் பாலசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டபடி, இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நான் சம்பந்தியாகிவிட் காரணத்தினால், யாரும் அந்த அவநம்பிக்கை கொண்டிடத் தேவையில்லை என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
С
ரூ. 31/2 கோடி 1967-ம் ஆண்டு அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ; இன்றைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற தொகை, ரூ.81/2 கோடி. பிற்படுத்தப்பட்டவர்களுக்காக 1967-லே ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1 கோடி. 1972-ல் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.41/2 கோடி. இதுவரையிலே இல்லாத அளவுக்குத் தமிழ்நாட்டினுடைய வரலாற்றிலே இல்லாத அளவுக்கு அந்த இலாக்கா தனியாக அமைக்கப்பட்டு, பிற்பட்டவருக்கான ஒரு தனி அமைச்சருடைய நேரடிப் பார்வையில் அந்த இலாக்கா இயங்கி வருகிறது. அண்மையிலே கூட, நானும் அந்தத் துறையினுடைய அமைச்சர் இராஜாராமும் சேலத்திற்குச் சென்று புதியதாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைந்து இருக்கிற சமுதாயத்தினுடைய பாராட்டுதலைப் பெற்றோம். பிற்படுத்தப் பட்டோர் நலனுக்காக அமைக்கப்பட்ட பின்தங்கியோர் நலக் குழுவின் சிபாரிசின் அடிப்படையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட வகுப்பினர் ஏறத்தாழ 15 அல்லது 16. அர்ச்சகரை வேளாளர், கம்பர், கள்வேலி கவுண்டர், கன்னார், கண்ணட சைனீகர், குர்சிடிகார், ஒவச்சர், பாணர் வெள்ளான் செட்டியார், வேடர், ஆஸ்தாந்திர கோலா, செட்டி, சக்கரவார், பணி செய்வார், சவளக்காரர்-ஆகிய 15 வகுப்பினர் இன்றைக்குப் பின்தங்கியோர் பட்டியலிலே புதிதாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.
1967-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இருந்த விடுதிகள் 11. இந்த 5 ஆண்டுக் காலத்திலே.