உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

சட்டசபையிலிருந்து

197

பேசமாட்டார்களாம், பொது மக்களிடத்தில் சொல்லமாட்டார்களாம். சட்டமன்றத்தில் பேசுங்கள், நல்ல பாதுகாப்பு உண்டு, சட்டமன்றத்தில் எதையும் பேசலாம், அந்தப் பாதுகாப்பு இங்கே அளிக்கப்பட்டிருக்கிறது, பதில் சொல்கிற கடமை எங்களுக்கு இருக்கிறது. ஆனால் இங்கே பேச வருவதில்லை. பொது மக்களிடத்திலே பேசுங்கள், பத்திரிகைகளிலே வரட்டும், நீங்கள் எதிர்பார்க்கின்ற நீதி விசாரணை, உயர்நீதி மன்றத்தில் நாம் நடத்திக்கொள்ளலாம் என்று சொன்னோம்.

பேராசிரியர் அன்பழகன், நேற்றோ, அதற்கு முன்தினமோ குறிப்பிட்டார்கள். அவதூறு கூறுகிறவர்கள் தப்பித்துக்கொள்வது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மாத்திரம் விசாரணைக்கு உட்படுவது என்பது சரியான நியாயமாகாது என்று குறிப்பிட்டார்கள். அவதூறு கூறுபவர்களுக்கு என்ன தண்டனை?

ஆகவேதான், நீதிமன்றத்தில் சந்திப்போம், தைரியம் இருந்தால், துணிவு இருந்தால், பல்லாயிரக்கணக்கான மக்கள் மன்றத்தில் கூறுங்கள். கருணாநிதி என்ன குற்றம் செய்தார், நெடுஞ்செழியன் என்ன குற்றம் செய்தார், நடராசன் என்ன குற்றம் செய்தார், சத்தியவாணிமுத்து என்ன குற்றம் செய்தார் என்று தைரியம் இருந்தால், துணிவு இருந்தால், திராணி இருந்தால், தெம்பு இருந்தால், வக்கு, வகை இருந்தால் பொது மக்கள் முன்னால் கூறட்டும், நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று கூறினோம். அங்கும் கூற முடியாதாம். சட்டமன்றத்தில் கூறுங்கள், பவ்யமாகப் பேசுவோம், இங்கே பாதுகாப்பு உண்டு, நான் பாதுகாப்பு என்று சொல்வது ஏதோ வன்முறையிலிருந்து பாதுகாப்பு என்று கருதிக் கொள்ளவேண்டாம். சட்டமன்றத்தில் சில உரிமைகள் இங்கே அளிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட பாதுகாப்பிற்குள், அந்த வளையத்திற்குள் நின்று பேசுகின்ற உரிமை, ஜனநாயகக் கடமை இருக்கிறது, இங்கே பேசுங்கள் என்று கூறினோம். இங்கேயும் பேசமாட்டோம், அங்கேயும் பேச மாட்டோம். மர்மயோகியின் மர்மப் பேழையில் இருக்கிறது, ஆகவே மர்மப் பேழையின் உள்ளே இருப்பதை விசாரணை வைத்துத்தான் ஆராயவேண்டும் என்று சொன்னால், இதைவிட வேடிக்கை, வேதனை என்ன இருக்க முடியும் ?

நடப்பது கொள்கைப் போராட்டமா? கம்யூனிஸ்டு கட்சி அல்லது வேறு சில கட்சிகள், தி.மு.க 50 பஸ் விடுகிறவர்களைத் தான். அவைகளைத்தான் எடுத்துக்கொண்டு தேசீயமயமாக்கி