உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

199

தி.மு.க. க. பொது மகாநாட்டில் சொன்னார்கள். தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்டு கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்று சொன்னார்கள். அதை இன்றைக்குச் செயல்படுத்தி வருகிறது இந்த ஆட்சி. இப்படியே நீடித்தால் வலதுசாரி கம்யூனிஸ்டு கட்சிக்கு இடமே இல்லாமல் போய்விடும் என்ற பயத்தின் காரணமாக ஊழல், ஊழல், லஞ்சம் என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

நிர்வாகத்தில் தலையீடுகள் என்று பேசுகிறார்கள் நிர்வாகத்தில் தலையீடு என்ற குற்றச்சாட்டு. திரு. பக்தவத்சலம் அவர்கள் எழுதிய புத்தகத்தைப் படித்தேன். 'எனது நினைவுகள் என்ற புத்தகம், அதிலே 106-வது பக்கம், குறித்துக் கொள்ளலாம். நான் புத்தகத்தை எடுத்துவரவில்லை. அதிலே அவர் குறிப்பிடுகிறார். 'காமராஜின் சிபார்சுகள்' என்கின்ற தலைப்பில் சொல்கிறார்கள்.

“ காமராஜ் பல முறை பல விஷயங்கள்பற்றி என்னிடம் சிபார்சு செய்திருக்கிறார். அவர் சொல்லும் விஷயம் ‘தகாதது அல்ல' என்று இருந்தால் உடனடியாக அதைச் செய்திருக்கிறேன். சாதாரணமாக நான் செய்யாமல் இருந்திருக்கக்கூடியதைக்கூட காமராஜர் சொல்கிறார்

என்பதற்காகச் செய்திருக்கிறேன்.”

திரு.பக்தவத்சலம் அவர்கள் 'எனது நினைவுகள்' என்ற புத்தகத்தில் 'காமராஜின் சிபார்சுகள்' என்ற தலைப்பின்கீழ் எழுதிய வாசகங்கள் இவை. 110-ம் பக்கத்தில் இன்னொன்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

"ஒரு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவரை விட்டு விடுமாறு ஒரு எம்.எல்.ஏ. சப்-இன்ஸ்பெக்டரிடம் கூறியிருக்கிறார். சப்-இன்ஸ்பெக்டர் அவ்வாறு செய்ய மறுத்து விடுமாறு ஒரு எம்.எல்.ஏ சப்-இன்ஸ்பெக்டரிடம் கூறி அவரை மாற்றவேண்டுமென்று எம்.எல்.ஏ வற்புறுத்தியிருக்கிறார்.....

அந்த

தான் சொல்வதைக் கேட்காவிட்டால் ஊழல் புகார் கிளப்பப்படும் என்பது அந்த எம்.எல்.ஏ. காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அவர்மீது ஊழல் புகார் கூறி அவரை மாற்ற வேண்டும் என்று அந்த எம்.எல்.ஏ. வற்புறுத்தியிருக்கிறார்.

"அப்போது விவசாய மந்திரியாக இருந்த கக்கன், அந்த சப்-இன்ஸ்பெக்டரை வேறு இடத்திற்கு மாற்றுமாறு ஜில்லா