உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

மாற்றுக் கட்சியினர் எண்ணிப் பார்த்திட வேண்டும். எங்களை ஐந்தாண்டுக் காலம் வாழ விட்டாலும்சரி, அல்லது ஐந்தாண்டுக் காலம் ஆளவிட்டாலும் சரி, நாங்கள் இந்த நாட்டு ஏழை எளிய மக்கள் வாழ வேண்டும் என்பதிலே உள்ள எங்கள் லட்சியத்தோடு பணிபுரிகிறோம்; மேலும் பணிபுரிவோம். என்பதை மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன். சமுதாயத்திலே பின் தங்கிய மக்கள், ஏழை எளிய மக்கள், அரிசன மக்கள், நடுத்தர மக்கள், விவசாயப் பெருங்குடி மக்கள் இவர்கள் வாழ்க்கையை உயரச் செய்வதே எங்கள் லட்சியப் பணி. எவ்வளவு நாள் வாழப்போகிறோமோ? பதவியிலே இருக்கிற காலத்தில், மட்டுமல்ல, ஆட்சியிலிருக்கும் வேலை முடிந்துவிட்டால் என்னைப்போல் சந்தோஷப்படுகிறவர்கள் யாரும் இருக்க முடியாது. என்னைப் பொறுத்த வரையிலே நான் இராஜாஜி அவர்களைப் போன்றோ அல்லது தந்தை பெரியார் அவர்களைப் போன்றோ நான் நீண்டநாள் வாழ்வேன் என்று நினைக்க வில்லை. என் உடலிலே அந்த அளவுக்கு வலிவு இல்லை. பேரறிஞர் போல போவேன். அதைப்பற்றி நான் கவலைப் படவில்லை. (பல குரல்கள் : அப்படிப் பேசாதீர்கள்). ஆனால் என்னுடைய கடைசி நிமிட மூச்சு இருக்கும் வரையில் தமிழ் சமுதாயத்திற்காக, 'பாடுபடுவேன், பாடுபடுவேன்' என்று கூறி முடித்துக் கொள்கிறேன். வணக்கம்.