212
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
தகுதி படைத்தவர்கள் என்று உணருகிறார் என்பதை நான் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.
இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இந்த அவையிலே சுதந்திராக் கட்சியினுடைய தலைவர் முன்மொழிந்து, அதற்குப் பிறகு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பிலே கொள்கையை மறுக்கின்ற கண்டனத் தீர்மானம் ஒன்று முன்மொழியப்பெற்று எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்களும், ஆளும் கட்சி வரிசையில் உள்ளவர்களும் தங்களுடைய கருத்துக்களை இந்தத் தீர்மானங்கள்மீது எடுத்துச்சொல்லி இருக்கிறார்கள். 7இப்பொழுது பேசிக்கொண்டிருக்கும் என்னையும் சேர்த்து 46 பேர் இந்தத் தீர்மானத்திலே கருத்துக்களைக் கூறியிருக்கிறார்கள். அதிலே, தி.மு.க.சார்பில் 16 பேர்களும் மற்றக் கட்சிகளின் சார்பிலே 30 பேர்களும் உரையாற்றி இருக்கிறார்கள். நான் பேசி முடித்த பிறகு தீர்மானங்களை முன்மொழிந்தவர்கள் மீண்டும் பேசுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். ஆகவே, பேசுகின்றவர்களுடைய எண்ணிக்கைக் கணக்கில் கூட நல்ல ஜனநாயக முறை இந்த அவையிலே, தலைவர் அவர்களே, தங்களால் பின்பற்றப்பட்டு, அனைவருக்கும் நல்ல வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டுக் கருத்துக்களைக் கடுமையாகச் சொல்லுவது, காரசாரமாகச் சொல்லுவது என்ற வகையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக இந்த மன்றம் சில நேரங்களில் பரபரப்பு அடைந்தாலும், பிறகு கட்டிக் காத்துவரும் பண்பாட்டை உணர்ந்து தன்னைத்தானே திருத்திக்கொள்ளும் அளவுக்கு இந்த மன்றத்தின் நடவடிக்கைகள் அமைந்தன என்பதையும், இன்று மாலையிலே நடைபெற்ற இந்த நிகழ்ச்சி இரண்டு, மூன்று நாட்களாகக் காலையிலே நடைபெற்ற நிகழ்ச்சிகளைவிடக் கொஞ்சம் குளிர்ச்சியைத் தரும் வகையில் அமைந்திருக்கிறது என்பதையும் நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். இதைப் பார்க்கும்போது ஒவ்வொரு நாளும் மாலையிலே நமது சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டால் மிக அமைதியான முறையில், கொஞ்சம் சூடு குறைந்த அளவில் பேரவை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கூட நான் கருதுகிறேன்.
இந்த அரசுக்கு கொள்கை இல்லை என்று கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் அவர்கள் கூறித் தன்னுடைய வாதத்தைத் தொடங்கினார்கள். என்னுடைய அருமை நண்பர் மதியழகன் அவர்கள் நான்தான் இவரை முதலமைச்சராக முன்மொழிந்தேன்,