உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அடுத்து, மிக முக்கியமாகப் பேசப்பட்ட விஷயம்; இந்த தீர்மானத்தை முன்மொழிந்தவர்களும், பிறகு வழி மொழிந்தவர் களும் மிக முக்கியமாக எடுத்துக் காட்டியது, நம்முடைய நண்பர் மதியழகன் அவர்களும் கடைசியாக எடுத்துக் காட்டியது, இன்று தமிழ் நாட்டிலே விலைவாசி வேகமாக உயர்ந்து விட்டது, உணவு நிலை திருப்திகரமாக இல்லை, என்கிற இந்தக் குறைபாடு இங்கே எடுத்துக்காட்டப்பட்டது

ஆனால், விலைவாசி ஏற்றத்திற்கு யார் காரணம்? எந்த நிலை காரணம் ? என்பதை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள், எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து தீர்மானத்தை வழிமொழிந்து பேசியவர்களேகூட மத்திய அரசுக்கும் ஓரளவு பொறுப்புண்டு என்பதை இங்கே ஒத்துக் கொண்டார்கள். திரு.கே.டி.கே. தங்கமணி பேசுகிற நேரத்தில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் விலைவாசி அதிகம், அதை நான் மெய்ப்பிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முதலில் உலகத்திலே விலைவாசி நிலவரத்தில் இந்தியா எங்கே இருக்கிறது என்று பார்ப்போம். பிறகு இந்தியாவில் தமிழ் நாடு எங்கே இருக்கிறது என்று பார்ப்போம். உலகத்தில் விலைவாசி நிலவரத்தைப்பற்றி ஐ.எல்.ஓ. என்று சொல்லப்படுகின்ற இன்டர்நேஷனல் லேபர் ஆர்கனைசேஷன் வெளியிட்டிருக்கின்ற புள்ளி விவரத்தைப் பார்ப்போம். 1963 மார்ச் முதல் 1972 வரை உலகத்திலுள்ள விலைவாசி நிலவரங்களை அது - ஐ.எல்.ஓ. - வெளியிட்டிருக்கிறது. தாய் லாந்து 21 சதவிகிதம், மொராகோ 22 சதவிகிதம், கென்யா 25 சதவிகிதம், ஈரான் 28 சதவிகிதம், எதியோபியா 32 சதவிகிதம், மெக்ஸிகோ 35 சதவிகிதம், இலங்கை 36 சதவிகிதம், பாகிஸ்தான் 45 சதவிகிதம், மேற்கு ஜெர்மனி 32 சதவிகிதம், கனடா 33 சதவிகிதம், அமெரிக்கா 35 சதவிகிதம், ஆஸ்திரேலியா 37 சதவிகிதம், இத்தாலி 39 சதவிகிதம், பிரான்ஸ் 43 சதவிகிதம்,, ஜப்பான் 55 சதவிகிதம், இங்கிலாந்து 46 சதவிகிதம், இந்தியா 95 சதவிகிதம். இது இண்டர்னேஷனல் லேபர் ஆர்கனைசேஷன் - வெளியிட்டிருக்கிற புள்ளிவிவரப் பட்டியலாகும்.

இதிலே இந்தியா 95 சதவிகிதம் எல்லாவற்றிலும் உயர்ந்து நிற்கிறது. அந்த இந்தியாவில் நம்முடைய தமிழ் நாட்டின்