உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

245

நேரடியாகச் சென்று பேசினோம். லெவியாவது நாங்கள் பெற்றுக் கொள்வதற்கு எங்களுக்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டோம். இவ்வளவு முறையீடும் மறுக்கப்பட்ட பிறகு சிறு தானியங்கள் எல்லா மாநிலங்களுக்கும் கொண்டுசெல்லலாம் என்கின்ற உத்தரவு நிலைப்படுத்தப்பட்டது. அது திரும்பப் பெறமாட்டாது என்று மத்திய அரசால் நமக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது.

நம்முடைய மாநிலத்தினுடைய அரிசி உற்பத்தி, அதே நேரத்தில் சிறு தானியங்களினுடைய உற்பத்தி இரண்டையும் கணக்கிட்டால் 1973-ம் ஆண்டு நம் மாநிலத்தில் அரிசி உற்பத்தி 55 லட்சம் டன்னாகவும் சிறு தானியங்களினுடைய உற்பத்தி 14 லட்சம் டன் ஆகவும் இருந்தது.

1974-ம் ஆண்டு அரிசி உற்பத்தி 53 லட்சம் டன்னாகவும் சிறு தானியங்களினுடைய உற்பத்தி 13 லட்சம் டன்னாகவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

1974-ம் ஆண்டு மக்கள்தொகையைக் கணக்கிட்டதில் நம் தமிழ் மாநிலத்தினுடைய மக்கள் தொகை 41/2 கோடியாகும். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 400 கிராம் அரிசி தேவை என்று கணக்கு வைத்துக்கொண்டால் ஆண்டு ஒன்றுக்கு 146 கிலோகிராம் அரிசி ஒரு நபருக்குத் தேவைப்படுகிறது. இதன்படி நம் மக்கள் தொகைக்கு, மொத்தத் தொகைக்கு, அதற்கான தேவை ஆண்டு ஒன்றுக்கு 65.7 லட்சம் டன். நம்முடைய அரிசி உற்பத்தி 53 லட்சம் டன்னையும் சிறுதானிய உற்பத்தி 13 லட்சம் டன்னையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 66 லட்சம் டன் நமக்குக் கிடைத்து மாநிலம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக இப்போதும் திகழ்ந்திருக்க முடியும்.

ஆனால், மத்திய அரசு 6-3-1974 அன்று பிறப்பித்த மாநிலக் கட்டுப்பாடுகள் பற்றிய தடைகள் நீக்கப்படுகின்றன. கட்டுப்பாடு கிடையாது என்கின்ற அந்த உத்தரவிற்குப் பிறகு ஏற்பட்ட சூழ்நிலையை நான் இங்கே சில எடுத்துக்காட்டுகளின் மூலம் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தக் கட்டுப்பாட்டை எடுப்பதற்கு முன்பு 1974 சனவரியில் கோவை மாவட்டத்தில் கம்பின் விலை ஒரு க்வின்டால் 89 ரூபாய். அதே நேரத்தில்