252
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
தமிழகத்தில் உணவுப் பிரச்சினை மிக மோசமாக ஆகிவிட்டது என்று வாசகம் அமைவதற்கு பதிலாக மிக சந்தோஷத்தோடு வாசகம் அமைந்து இருக்கிறது. "அநியாய அரிசி விலை எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் முழுமையும் சூடுபிடித்து விட்டது. தஞ்சை மாவட்டத்தில் நமது கட்சி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது." வரவேற்கிறேன். மறியல், சிறைபிடித்தல், தண்டனை வழங்குதல், ஏற்றுக்கொள்ளுதல், அவைகளை வரவேற்கிறேன். அடுத்து "வேறு பல மாவட்டங்களில் நமது கட்சி இந்தப் போராட்டத்தில் பல்வேறு வடிவங்களில் ஈடுபட்டுள்ளது." பல்வேறு வடிவங்கள்தான் ஆபத்தான வடிவங்கள். அந்த வடிவங்களினால் வந்த தீவினைகள்தான். "ஆங்காங்கு உள்ள மக்களின் உணர்விற்கேற்ப இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தித் தலைமை தாங்க நம் கட்சி அமைப்புகள் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்" - கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகள் முழு பொறுப்பு எடுக்க வேண்டும். எவ்வளவு கூட்டணியாக இருக்கிறார்கள் பாருங்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தார் கட்சி அமைப்புகள் தலைமை தாங்கவேண்டும் என்று அதிலேயே பெயரைத் தட்டிக் கொண்டு போக கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டு இருக்கிறது.
—
"1974ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்த இனவெறி - மொழிவெறி எதிர்ப்புக் கூட்டங்களை அநியாய அரிசி விலை எதிர்ப்புக் கூட்டங்களாக இயக்கத்திற்கு உந்து சக்தியாக இதுதான் முக்கியமான வார்த்தை - இயக்கத்திற்கு உந்து சக்தியாக விளங்கும் வகையில் நடத்துமாறு எல்லா மாவட்ட குழுக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.”
தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சினையை ஒரு நிலைக்குக் கொண்டுவருவதற்கு இந்தப் போராட்டம் பயன்படவேண்டும் என்று சொல்லியிருந்தால், மகிழ்ச்சி அடைந்திருப்பேன். வரவேற்றிருப்பேன். ஆனால் இயக்கத்திற்கு ஒரு உந்து சக்தியாக, அந்த இயக்கம் வளர அந்தக் கட்சிக்கு ஒரு உந்து சக்தியாக இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் இந்த சுற்றறிக்கையை அனுப்புகிறார்கள்.