உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

257

திடீரென்று நாங்கள் ராஜினாமா செய்வதாகவே வைத்துக் கொள்ளுங்கள். தேர்தல் வேலைகள் எல்லாம் செய்ய உங்களுக்கு நேரம் வேண்டாமா? நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது பேச அன்றைக்கு ஒப்புக்கொண்டதை போல ஒப்புக் கொண்டால் எப்படி நேரம் வீணாகி விட்டதோ அதைப்போல இப்போது திடீரென்று ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டால் ஓராண்டு காலத்துக்கு நீங்கள் செய்ய வேண்டிய தேர்தல் தயாரிப்புகள் எவ்வளவோ இருக்கின்றன.

ஆகவே, இப்போது தொகுதி நிர்ணயம் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. நம்முடைய கருத்துக்களை எல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் 39 இருப்பதை 40 ஆகவும், சட்ட மன்றத்தில் 234 இருப்பதை 280 ஆகவும் ஆக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். பாராளுமன்றத் திலும் இந்தப் பிரச்ச்னையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக் கிறோம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். அதிலிருந்து தொகுதிகளெல்லாம் நிர்ணயமாகித்தான் தேர்தல் நடக்கும் என்பது தெரிகிறது. இருந்தாலும் அவசரப்பட்டு இடையிலேயே 'ஓடிவிடு, ஓடிவிடு' என்று சொன்னால் எங்கே ஓடுவது? ஆகவே அந்தக் குரலை கொஞ்ச நாளைக்கு ஒத்தி வைத்துவிட்டு, இருக்கவே இருக்கிறது தேர்தல் என்று பொறுத்துக்கொண்டு, தேர்தலிலே ஜனநாயக முறையில் யாருக்கு மக்கள் தீர்ப்பு அளிக்கிறார்களோ அவர்கள் இங்கே வந்து உட்காரட்டும் என்று எல்லாக் கட்சியினரும் கட்சி சார்பற்ற முறையிலே தோழமைக் கட்சியாக இருந்து இந்த ஒரு விஷயத்திலே பாடுபட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

பெரியவர் மணலி அவர்கள் சர்வ கட்சிக் கூட்டத்தைக் கூட்டி யோசனை கேளுங்கள் என்று சொன்னார்கள். இந்த அரசைப் பொறுத்தவரையில் அட்டியின்றி இம்மாதிரியான கருத்துக்களை எப்போதும் ஏற்றுச் செய்வதில் மறுப்புக் கிடையாது என்று கூறி, இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தேவையற்றது என்று தெரிவித்துக்கொண்டு, மாரிமுத்து அவர்கள் உணவுப் பிரச்சினை மணி ஒன்றே முக்கால் ஆகிவிட்டது - இதை வலியுறுத்தாமல் இந்தப் பிரச்சினைக்கு ஒத்துழைத்து, ஆக்கம் அளிக்க வேண்டுமென்று கேட்டு அமைகிறேன். வணக்கம்.,

-