உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

277

துணையோடு ஆட்சி நடத்தக்கூடிய கேரளம் போன்ற மாநிலங்களும் இருக்கின்றன, அங்கே கூட பிர்லாவிற்குத் தொழிற்சாலை வைக்க அனுமதி தரப்பட்டிருக்கிறது. ஆகவே, தொழில் அதிபர்கள் ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் நேரத்தில் அவர்களுடைய தொழில் வளர்வதற்கு ஏற்படும் சாதக பாதகங்களை எடுத்துச் சொல்ல ஒரு அரசோடு தொடர்பு கொள்வது தவறு அல்ல. அதனால் அவர்களுக்கு அரசு அடிமையாகி விடுகிறது என்றால் அது தவறு. அப்படி நாங்கள் ஏதாவது தவறுகள் எந்த நேரத்திலேயாவது செய்திருந்தால், அதைச் சொன்னால் நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். தியாகராஜ முதலியாரைப் பற்றி திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் சொன்னார்கள், தியாகராஜ முதலியார் பெரிய பணக்காரர், பூர்ஷுவா என்ற எண்ணத்தை மனத்தில் வைத்துக் கொண்டு இந்த அரசைக் குற்றஞ் சாட்டினார்கள். யார் அந்த தியாகராஜ முதலியார்? ஆவடி சோஷலிசம் என்று பேசப்படுகிறதே, அந்த ஆவடி காங்கிரஸ் மாநாட்டை முன்னின்று நடத்தியவர்.

திரு. ஆர். பொன்னப்ப நாடார் : அதே தியாகராஜ முதலியார் தங்களுக்கு பொன்னாடை போர்த்தினாரே, அதை மறந்து விட்டீர்களா?

மாண்புமிகு கலைஞர் கலைஞர் மு. கருணாநிதி : நான் சொல்வதைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்த ஆவடி சோஷலிச மாநாட்டை நடத்தியவரே தியாகராஜ முதலியார்தான். (குறுக்கீடு) அவர்தான் உலகத் தமிழ் மாநாட்டையும் நடத்தினார். அண்ணா இருந்த காலத்தில்தான். நான் சொல்ல வருவது, இந்த தியாகராஜ முதலியாருக்கு எந்தச் கு சலுகையையாவது

அளித்தோமா? அவர் பொன்னாடை போர்த்தினார் என்பதற்காக 5,000 ஏக்கர் நிலத்தை நீங்கள் விதிவிலக்கோடு அனுபவித்துக் கொள்ளுங்கள், கரும்பு பயிரிட்டுக் கொள்ளுங்கள், அதற்கு உச்சவரம்பு கிடையாது என்று நாங்கள் சொல்லியிருந்தால் நாங்கள் அவருக்கு ஆட்பட்டுவிட்டோம், பொன்னாடையிலே மயங்கிவிட்டோம் என்று பொருள். பழகுவது வேறு, நண்பராக இருப்பது வேறு, ஆனால் கொள்கைகளை நிறைவேற்றுகின்ற நேரத்திலே அதற்குத் தலைவணங்க வேண்டும், வடபாதி மங்கலமாக இருந்தாலும், கபிஸ்தலமாக இருந்தாலும், பூண்டி