உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் இந்தியத் துணைக் கண்டத்திலே மத்திய அரசின் சார்பிலே அறிவிக்கப்பெற்று, ஏறத்தாழ 25,000 கோடி ரூபாயில் அந்தத் திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்காக அறிவித்து, நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் முடிந்த பிறகு, ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான வரைவு ஏடுகள் எல்லாம் தயாரிக்கப்பெற்று, இந்திய நாட்டின் தலைநகரத்தில் இந்தியாவிலுள்ள எல்லா மாநில அமைச்சர் களும் கலந்துகொள்ளும் தேசிய வளர்ச்சிக் கூட்டமும் நடைபெற்று, ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு எவ்வளவு தொகை ஒதுக்குவது என்றும் அறிவிக்கப்பட்டது.

நான்காவது ஐந்தாண்டித் திட்டத்திற்கு நான் முதலிலே சுட்டிக்காட்டியதைப் போல 25,000 கோடி ரூபாய் மொத்தத் தொகையாக ஒதுக்கப்பட்டது. அப்படி ஒதுக்கப்பட்ட பணத்தில் நம்முடைய தமிழ் மாநிலத்தை மாத்திரம் கணக்கிலே எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு ஆண்டும் தரப்பட்ட தரப்பட்ட மத்திய அரசினுடைய உதவி (சென்டரல் அசிஸ்டன்ஸ்) என்ற அந்தத் தொகையிலே எடுத்துக்கொண்டு பார்த்தால் ஏறத்தாழ ஐந் தாண்டுக் காலத்தில், நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் நம்முடைய மாநிலத்திற்கு தரப்பட்டிருக்கிறது.

ஒன்றை உறுப்பினர்கள் மறந்துவிடக்கூடாது. இந்த 200 கோடி ரூபாயில் 70 சதவீதம் கடனாக நாம் திருப்பித்தர வேண்டும். அதைத் திருப்பித் தருவது எப்படி என்றால் அடுத்த ஆண்டு 40 கோடியோ, 50 கோடியோ தரும்போது, நாம் திருப்பித் தரவேண்டிய கடனைக் கழித்துவிட்டுத்தான் மீதத்தைத் தருவார்கள். அந்த வகையிலே நாம் அந்தக் கடனைத் திருப்பித் தந்தாக வேண்டும். இப்படி ஐந்தாண்டுக் காலத்திலே நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்திலே ஆண்டுத் திட்டத்திற்காக மத்திய அரசு 70 சதவீதம் கடனாகவும், 30 சதவீதம் மானியமாகவும் தந்தது சற்றொப்ப 200 கோடி ரூபாயாகும்.