உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

யிருக்கிறார்கள். நாங்கள் பத்து அம்சத் திட்டத்தைக்கூட எதிர்க்க வில்லை. 'இன்னும் சொல்லப் போனால், இந்தப் பத்து அம்சத் திட்டத்தை அது அறிவிக்கப்பட்டபோது, நாங்கள் ஆதரித்த வர்கள். பாங்குகள் தேசிய மயமாக்கப்பட்டபோது, எந்த மாநிலத்திலும் செய்யாத அளவிற்கு, 14 வங்கிகளைத் தேசிய மாக்கிய இந்திராகாந்தி அவர்களைத் தமிழ்நாட்டிற்கு அழைத்துப் பரிசாகக் கூட 14 பொருள்களை அவர்களிடம் வழங்கினோம். இப்போது அங்கே அமர்ந்திருக்கிற அனந்த நாயகி அம்மையார் போன்றவர்கள்கூட வேறு கட்சியில் இருந்து, அதைப் பார்த்து ஆத்திரப்பட்ட நேரத்தில், நாங்கள் இந்திராகாந்திக்கு வழங்கினோம்.

திருமதி. த.ந. அனந்தநாயகி: உங்கள் கட்சியைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் ஒருவரால்தான் அரசியல் சிக்கலே வந்தது என்பதை ஞாபகப்படுத்த ஆசைப்படுகிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் என்று போடப்பட்டிருக்கிறது. அதற்குத் துணையாக மேலும் உதவிகர மாக இந்த 20 அம்சத் திட்டம் இருப்பதாக டாக்டர் ஹண்டே அவர்கள் சொல்லுகிறார்கள். நான் சொல்லுகிறேன். ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்குத் திரை போட்டுவிட்டு 20 அம்சத் திட்டம் என்ற ரோட் சீன் போடப்பட்டிருக்கிறது என்று நான் சொல்லுகிறேன். ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ஒதுக்கப் பட்ட ரூ. 53 ஆயிரம் கோடி என்ன ஆயிற்று? அதுதான் என்னுடைய கேள்வி. அதைப் புரிந்துகொண்டால் அத்தோடு இது இணையவில்லையென்று புரிந்து கொள்ளலாம். ரூ. 53 ஆயிரம் கோடிக்குத் திட்டம் போட்டு அந்தத் தொகையை மாநிலங்களுக்குக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் 20 அம்சத் திட்டத்தைப் பிரகடனம் செய்துவிட்டு, இதற்கு மாநிலங்களுக்கு ஆகின்ற செலவை எப்படித் தரப்போகிறார்கள் என்பதுதான்

எனது அடுத்த கேள்வியாகும். அந்தக் கேள்வியின் அடிப்படையில்தான் நான் இதைத் தெரிவித்தேனேயல்லாமல் வேறு அல்ல.

ருபது அம்சத் திட்டங்கள் எவை எவை என்று ஒரு ஐந்தாறு திட்டங்களை மட்டும் இங்கே பேசிய மாண்புமிகு