உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

டன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்டு வரையில் மட்டும் வழங்கப்பட்ட ரசாயன உரத்தின் அளவு 25,123 டன். இன்னும் மேலும் சம்பாப் பயிருக்கெல்லாம் வழங்க இருக் கிறோம் ஆகவே அந்த உரத் தட்டுப்பாடும் இல்லை. உற்பத்தி முனையில் நாம் தீவிரமாகவே இருக்கிறோம்.

அதைப்போல் பூச்சிகளால் ஏற்படுகிற தொல்லையைக் கட்டுப்படுத்தவும், அதை அறவே நீக்குவதற்கும், தெளிப்பான் களின் எண்ணிக்கையை உயர்த்தி அந்த முனையிலும் அலுவலர்கள், அயராது பணியாற்றியிருக்கிறார்கள்.

பயிர்களைப் பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம். வறட்சி நேரத்தில் விவசாயிகளுக்கு உதவுகிற வகையில் டீசல் இன்ஜின்கள் வைத்துக் கொண்டால் அவர் களுக்கு ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று அறிவித்து, அப்படி இன்ஜின்களை வாங்கியவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியதன் மூலம், இதுவரையில் 12,200 பேர் பயன் பெற்றிருக்கின்றனர். ஏற்கெனவே அறிவித்தபடி 15,000 பேருக்கு இந்தப் பயன் செல்லத்தக்க வகையில் நாம் ரூ. 150 லட்சம் அதற்காக ஒதுக்கியிருக்கிறோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இந்த மானிய உதவி எவ்வளவு வரப்பிரசாதமாக அமைந்தது என்பதை விவசாயப் பெருங்குடி மக்கள் நன்றாக அறிவர். உற்பத்தி வகையில் பெருக்கப்பட வேண்டுமென்று பிரதமர் அவர்கள் அறிவித்ததால் இவைகளை யெல்லாம் மாண்புமிகு உறுப்பினர் ஒருவருக்குக்கூட கொஞ்சம் உற்சாகமான விஷயமாக இராது. ஆனாலும் விளக்கம் தேவை என்பதற்காக வைகளையெல்லாம் எடுத்துக்காட்டக்

கடமைப்பட்டிருக்கிறேன்.

சோள விதைகள் மட்டும் இந்த ஆண்டில் கோடைப் பருவத்தில் கோவை, நெல்லை, மதுரை, சேலத்தில் ஒரு பகுதி ஆகிய மாவட்டங்களில் 500 டன் வீரிய ஒட்டுச் சோள விதை களும் மக்காச் சோள வகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஆகவே, இப்படிப்பட்ட தீவிர நடவடிக்கைகளின் காரணமாக 1974-75ல் உற்பத்தியான அரிசி 41,66,001 டன்னாக பல இயற்கை நிலைமைகளின் காரணமாக இருந்தது. இந்த ஆண்டு