உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

309

அரசு என்னை மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள் கிறேன்.

1967-க்கு முன்பு 6.4.60இல் நமது மாநிலத்தில் உச்ச வரம்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டம் வந்த பிறகு 7 ஆண்டுக் காலத்தில் உபரியாக இருப்பதாக அறி விக்கப்பட்ட நிலம் 24,194 ஏக்கர். திரு. மாரிமுத்து அவர்கள் தொடர்ந்து செய்துவரப்பட்டதன் விளைவு என்று சொன்னாரே, அதற்காகச் சொல்கிறேன்; 1967க்கு முன்பு தமிழ்நாட்டில் உபரியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலம் 24,194 ஏக்கர். இதில் அரசு கைப்பற்றியது 16,330 ஏக்கர். நிலமற்ற ஏழை களிடம் ஒப்படை செய்யப்பட்டது எவ்வளவு தெரியுமா? ஒன்றுமே இல்லை. உபரி நிலம் யாருக்கும் வழங்கப்பட வில்லை. இந்த நிலங்கள் நிலமற்ற எவருக்கும் ஒப்படை செய்யப்படாத காரணத்தினால் பயன் அடைந்தவர்கள் புள்ளி விவரம் சொல்ல இயலாது.

1967க்குப் பிறகு உபரி நிலங்கள் என்று அறிவிக்கப் பட்டது மொத்தம் 1,08,068 ஏக்கராகும். இதில் அரசு கைப் பற்றிய நிலம் 88,146 ஏக்கர். இதில் 62,682 ஏக்கரா நிலமற்ற ஏழைகளிடம் ஒப்படை செய்யப்பட்டுவிட்டது. இதனால் பயன் அடைந்த உழவர் பெருமக்கள் 38,504 பேர்கள். இதுதான் 15 ஸ்டாண்டர்ட் ஏக்கரா ஒரு குடும்பத்திற்கு என்று நாம் கொண்டு வந்த உச்ச வரம்புச் சட்டத்திற்குப் பிறகு நாம் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக ஏற்பட்ட பயனாகும். அந்தச் சட்டத்தை நாம் 15.2.1970இல் கொண்டு வந்தோம். அந்தச் சட்டத்திற்குப் பிறகு நாம் எடுத்த வேகமான நடவடிக்கைகளின் காரணமாக 62,682 ஏக்கரா நிலமற்றவர்களிடம் ஒப்படை செய்யப் பட்டிருக்கிறது.

அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூட, ஓ, இல்லை- ஆளுங் காங்கிரஸ் கமிட்டி, ஒரு நல்ல மதிப்புரையை, இந்தியா வில் நில உச்சவரம்பில், நிலச் சீர்திருத்தத்தில் தமிழ்நாடுதான் இன்றைக்கு முன்னணியில் இருக்கிறது என்கின்ற நற்சான்று அளித்திருக்கின்றது.