உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அனுபோகத்தில் உள்ள நிலம் 6,03,899 என்றும் கணிக்கப் பட்டுள்ளது.

அஃதன்னியில் நிலவுடமையாளர்கள் வைத்திருக்கின்ற நிலத்தின் கணக்கு விவரங்களைத் தெரிந்துகொள்வதற்கும் மேலும் நிலச் சீர்திருத்தச் சட்டங்களை இயற்றுவதற்கும் பயன் படும் என்ற வகையிலே பட்டா விவரக் குறிப்பேடு என்ற ஒன்றை ஒவ்வொரு விவசாயியும் வைத்துக்கொள்ள வேண்டு மென்ற முறையிலே 1972ஆம் ஆண்டு, இருபது அம்சத் திட்டத்திற்கு முன்பே, 1972ஆம் ஆண்டிலேயே திட்டம் கொண்டுவரப்பட்டு, இதுவரை கொடுக்கப்பட்ட அப்படிப்பட்ட பட்டா விவரக் குறிப்பேடுகள் 1 1 கோடியே 4 லட்சம் பேர்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. இதற்கான செலவு ஒரு கோடி ரூபாய் என்பதை நான் இந்த மன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தரிசு நிலங்களை ஒப்படை செய்ய வேண்டுமென்பது பிரதமர் அவர்களுடைய 20 அம்சத் திட்டங்களிலே ஒன்று. 1947இல் இருந்து நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1967ஆம் ஆண்டு வரையில் தமிழ் மாநிலத்திலே ஒப்படை செய்யப்பட்ட நிலம் இரண்டு லட்சத்து 88 ஆயிரம் ஏக்கர். இதனால் பயனடைந்தவர்கள் 1 லட்சத்து 15 ஆயிரம் பேர்கள். இருபது ஆண்டுக் காலத்திலே, இரண்டு லட்சத்து 88 ஆயிரம் ஏக்கர். 1967-க்குப் பிறகு இந்த எட்டாண்டுக் காலத்திலே 7,19,173 ஏக்கர் நிலம் நம்மால் ஒப்படைவு செய்யப்பட்டிருக்கிறது. இருபது ஆண்டுகளில் 1,15,000 பேர்கள் பயனடைந்திருக் கிறார்கள். இந்த எட்டு ஆண்டுகளில் 3,68,679 பேர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.

இந்த உச்சவரம்பிலே ஏதோ பினாமியெல்லாம் நடந்து விட்டதாக நம்முடைய நண்பர் மாரிமுத்து அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். ஒன்றிரண்டு நடந்தது, இன்னும் சில அந்தக் காலத்திலேயே நடந்துவிட்டது. மிகவும் முக்கியமான அமைச் சருடைய சொந்தக்காரரிடம், நான் பெயரைச் சொல்ல விரும்ப வில்லை; 282 சாதாரண ஏக்கர், அதாவது 141 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று வரும்; 141 ஸ்டாண்டர்டு ஏக்கர் 6.4.60இல் இருந்தது. ஆனால் 2.10.62க்குள்ளாக இந்த 141 ஸ்டாண்டர்டு