உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

315

இவைகளைத் தவிர, பிரதமர் அண்மையில் குறிப்பிடாத அம்சமாக 30 ஆயிரம் வீடுகள் அரிசன மக்களுக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் நல்ல கெட்டியான வீடுகள், ஒரு வீடு நாலாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள வீடுகள், டிசம்பர் மாதத்திற்குள் கட்டித்தர திட்டமிட்டு, அது முடிவடைய இருக்கிறது. இதற்காக ஆகும் செலவு 131/2 கோடி ரூபாய். இது பிரதமரின் 20 அம்சத் திட்டத்தில் இல்லாத ஒன்றாகும்.

அதைப்போலவே, மீனவர்களுக்கு 5 ஆயிரம் வீடுகள், முதல் கட்டமாகக் கட்டித்தர இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டிருக்கிறது. இந்த வேலைகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதுவும் இருபது அம்சத் திட்டத்தில் இல்லாத ஒன்றாகும்.

குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 1975ஆம் ஆண்டு அவசரச் சட்ட அறிவிப்புக்குப் பிறகு, பிரதமருடைய அறிவிப் புக்குப் பிறகு வந்ததல்ல, 1970-71ஆம் ஆண்டிலே தொடங்கப் பட்டு, இதுவரையில் 20 ஆயிரத்து 239 குடியிருப்புகள், வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் 3,220 குடியிருப்புகள்; குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் ஏறத்தாழ 17,019 குடியிருப்புகள் என்ற முறையிலே நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இப்போது கட்டிக் கொண்டிருக்கின்ற குடியிருப்புகள் 3,312. ஆக, 17 கோடி ரூபாய் செலவில் ஏறத்தாழ இருபதாயிரம் வீடுகள் குடிசை வாழ் மக்களுக்காகக் கட்டப்படுகின்றன. இதுவும் மதிப்பு மிகுந்த தலைமையமைச்சர் இந்திரா காந்தி அவர்கள் அறிவித்த 20 அம்சத் திட்டத்தில் இல்லாத ஒன்று. இதை நிறைவேற்றுவதற்காக வேண்டுமானால் இதைத் தொடங்கியதற்காக வேண்டுமானால் இல்லாததையெல்லாம் நீ எப்படி நிறைவேற்றினாய் என்று நீங்கள் கோபித்துக் கொள்ளலாமே தவிர, வேறு எதுவுமில்லை என்று கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கிராம மக்களுடைய கடன் சுமையைப் படிப்படியாகக் குறைக்க அவர்களிடமிருந்து கடனைத் திரும்பப் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடாமல் இருக்க, வழக்குகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குச் செல்லுபடியாகாமல் இருக்கச் செய்யவும், கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகள், அரசுக் கடன்கள் ஆகிய