உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

31

வேண்டுமென்ற மனோநிலையே கிடையாது என்பதையும் இந்த அவையிலே உள்ள அனைவரும் அனைத்துக் கட்சிகளைக் சார்ந்தவர்களும் அறிவார்கள் என்று நம்புகிறேன். இந்தப் பிரச்சனையைக் கட்சிக் கண்ணோட்டத்திலே நோக்காமல் இந்த அவையினுடைய மரபு, இந்த அவையினுடைய உரிமை, இந்த அவையினுடைய பெருமை இவற்றை நிறைந்த கவனத்தில் கொள்ள வேண்டும்.

நான் இந்த நேரத்தில் ஒரு எடுத்துக்காட்டைக் கூற விரும்புகிறேன். நான் இங்கே எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருந்தபொழுது அப்பொழுது முதலமைச்சராக இருந்த திரு. பக்தவத்சலம் அவர்களைப்பற்றி அப்பொழுது நான் ஆசிரியராக இருந்த முரசொலிப் பத்திரிகையில் கடுமையான வாசகத்தைப் பயன்படுத்தியிருந்தார்கள் என்று சொல்லி ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர் உரிமைப் பிரச்சனையைக் கொண்டு வந்தார்கள். முரசொலி பத்திரிகை என்று கேட்டதுமே நான் மிகுந்த ஆவலோடு அந்தப் பத்திரிகையை வாங்கிப் படித்துப் பார்த்தேன். அதற்குப்பிறகு அதுபற்றி அப்பொழுதைய முதலமைச்சர் அவர்கள் பதில் சொல்வதற்கு முன்னாலேயே உரிமைப் பிரச்சனையைப் பற்றி மற்றவர்கள் பேசுவதற்கு முன்னாலேயே நான் அதன் ஆசிரியராக இருக்கிறேன், ஆசிரியரே தலையங்கம் எழுதுவது இல்லை, பத்திரிகை நடத்துகிறவர்களுக்கு இது தெரியும், ஆசிரியர் ஊரில் இல்லாத நேரத்தில் துணை ஆசிரியர்களும் எழுதுவது உண்டு. ஆகவே கடுமையான வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது, அதற்குத் துணை ஆசிரியர்தான் பொறுப்பு என்றாலும், ஆசிரியர் என்ற முறையில் நான் பொறுப்பேற்கிறேன், இப்படிப்பட்ட வார்த்தைகள் பத்திரிகையில் வருவது தவறு என்று நானே குறிப் பிட்டு அவையில் வருத்தம் தெரிவித்து, இப்படி முதலமைச்சர் பக்தவத்தசலம் அவர்களைப் பற்றிக் கடுமையான வார்த்தைகள் முரசொலிப் பத்திரிகையில் பயன்படுத்தியிருப்பதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொல்லி, எப்படிச் சட்ட சபையைப் பற்றி பத்திரிகைகள் நடந்துகொள்ள வேண்டு மென்பதற்கு ஒரு வழி வகுத்துக் கொடுப்பதற்குக் காரணமாக இருந்தேன். அந்நாள் முதலமைச்சர் பக்தவத்சலமும் மற்ற கட்சித்