உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

யிருக்கிறார்கள். இங்கே போட்டால்தான் பாவம். அவர்கள் எல்லாம் போடலாம். இங்கே போட்டால் டெல்லிக்குத் தூதே போகும்; ஆனால் மைசூரில் இது பற்றி அவர்கள் தெரிவிக்கும் போது, A specially designed training programme for about 1,000 locally selected persons during this year in selected growth centers in the state. என்று போடப்பட்டிருக்கிறது. அதாவது அங்கே ஆயிரம்தான்; அதாவது விளம்பரப்படுத்தப்பட்ட இடத்தில் ஆயிரம்தான்; நமக்கே 6,387 ஆகும். நாங்கள் இருபது அம்சத் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று கண்டனத் தீர்மானம் கொண்டு வருகிறார்கள்.

விளம்பரப்படுத்தவில்லை என்று சொல்கிறீர்கள். (விளம் பரத்தைக் காட்டி) இதைவிடவா பெரிய விளம்பரம் செய்ய வேண்டும்? இவ்வளவு பெரிய விளம்பரம்! இந்த விளம் பரத்தில் நாங்கள் என்ன பிரதமரை விட்டுவிட்டோமா? இதில் ஆரம்பத்திலேயே பிரதமரின் பொருளாதாரத் திட்டங்களைப் பின்பற்றி' என்றுதான் தொடங்கியிருக்கிறோம். முடிக்கும் போதும் இந்த விளம்பரத்தில் பிரதமர் அறிவித்த எஞ்சிய திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு பீடு நடை போடு கிறது" என்றுதான் முடித்திருக்கிறோம்.

ஆக இந்த இரண்டு பக்க விளம்பரத்திலும் நாம் என்னென்ன காரியங்களைச் செய்தோம் என்று அறிவித்து இருக்கிறோம். தேவராஜ் அர்ஸ்க்கு இருக்கிற உரிமை, தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு இருக்கக்கூடாதா? அவர் என்னென்ன காரியங்களைச் செய்தோம்? செய்யப்போகிறோம் என்று அறிவித்திருக்கிறார். அதைத்தான் நானும் அறிவித்திருக்கிறேன். அவரும் பிரதமரின் பெயரைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்; படமும் போட்டிருக்கிறார்.

நாம் படம் போடவில்லை; காரணம் ஒரு முறை போட்டோம். அதாவது ஆறு கோடி ரூபாய் யுத்த நிதியாக இந்தியாவில் எந்த மாநிலமும் கொடுக்காத அளவிற்கு, கொடுத்த நேரத்தில், யுத்த நிதி கொடுங்கள் என்று கேட்கின்ற ஒரு விளம்பரத்தைப் பிரதமருடைய படத்தையும் முதலமைச்ச ருடைய படத்தையும் போட்டு வெளியிட்ட விளம்பரத்திற்குப் பெரிய மறுப்பு, பிரதமருடைய அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்