உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அம்சத் திட்டங்கள் வந்தன என்று முதலிலே சொல்லப்பட்டது. பிறகு இன்றைக்கு அதை மாற்றி இதை ஒரு முனைப்புத் திட்டம் என்று சொல்கிறார்கள்.

கண்டனத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்களும், வழி மொழிந்தவர்களும் அவசர நிலையைப் பற்றி இங்கே கருத்துக் களைத் தெரிவித்த காரணத்தினால் நானும் சில விளக்கங்களைச் சொல்லவேண்டிய நிலைமைக்கு ஆளாகி இருக்கிறேன்.

அவசர நிலை பற்றிக் கண்டனத் தீர்மானத்தில் குறிப்பிடப் படாவிட்டாலும் அதை ஒரு காலகட்டமாக மாத்திரம் இங்குக் குறிப்பிட்டார்கள். அதாவது அவசர நிலைக்குப் நிலைக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட 20 அம்சத் திட்டம் என்று ஒரு காலகட்டமாக மாத்திரம் அதைக் குறிப்பிட்டார்கள்.

ஆனால் அவசர நிலைக்கு மாறான கருத்துக்களைக் கூறுவது ஒன்றும் தவறானதல்ல. இதற்கு, நமக்கு ஏற்கனவே பல முன் உதாரணங்கள் இருக்கின்றன. அன்னிய நாட்டுப் படை யெடுப்பையொட்டி, அறிமுகப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தையே எதிர்த்தவர்கள் எல்லாம் உண்டு. எதிர்த்துத் தீர்மானம் கொடுத்தவர்கள் எல்லாம் உண்டு.

1964-ஆம் ஆண்டு டெல்லி பாராளுமன்ற மாநிலங்கள் அவையில் எனது மதிப்பு மிகுந்த முதுபெரும் நண்பர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவர் திரு. பூபேஷ் குப்தா அவர்கள் அன்றைய நெருக்கடி நிலையை ரத்து செய்ய வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தையே கொண்டு வந்தார். கம்யூனிஸ்ட் கட்சி சார்பில். அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரும்போது முகப்பிலே சொன்னார். "இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும், தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை பாதுகாப்பு அடிப்படையிலே வளர்ப்பதற்கும் நெருக்கடி நிலைமை தேவையில்லை" என்று சொன்னார்.