உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

359

நான் கொலைகாரர்களுக்காக வாதாடவில்லை. வன் நெஞ்சர்களுக்காக வாதாடவில்லை. சதிகாரர்களுக்காக வாதாட வில்லை. ரத்தப் புரட்சியில்தான் ஒரு நாட்டின் சுதந்தரம் இருக்கிறது என்று சொல்கிற வன்கணாளர்களுக்காக வாதாட வில்லை.

பிரதமரிடம் பேசிய நேரத்திலும் சரி, வேறுபல நேரங் களிலும் சரி, அந்த அம்மையார் விடுத்திருக்கிற அறிக்கை களிலும் சரி, அவர்கள் கொண்டிருக்கிற உருக்கமான உணர்ச்சி களை என்னால் உணர முடிகிறது. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் பிரதமர் கொலை செய்யப்படுவது என்பதோ, வன்முறை புரட்சி நாட்டில் ஏற்படும் என்பதோ என்றைக்கும் அனுமதிக்கக் கூடிய காரியம் அல்ல. பிரதமர் மீது சுமத்தப் படுகிற கொலை பழிச்சொற்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவைகள் அல்ல.

நான் சொல்கிறேன். யாராவது கொலை செய்யப்பட்டால் இந்திரா காந்தி கொலை செய்திருப்பார்கள் என்றெல்லாம்கூட சிலர் பேசுகிறார்கள். அப்படிப்பட்ட கண்ணியமற்ற பேச்சுகளை தி.மு.கழகம் என்றைக்கும் கையாண்டது கிடையாது.

இந்திரா காந்தி அவர்களோடு தி.மு.கழகத்திற்கு உறவு இருந்த காலத்திலும் சரி, உறவு முறிந்துவிட்ட காலத்திலும் சரி. எங்களுடைய பேச்சில் இம்மியளவு கண்ணியக்குறைவான தன்மையும், இந்திரா காந்தியைப் பற்றி இருந்தது கிடையாது. மத்தியில் இருக்கிற அரசோடு வீணாக மோதிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமும் கிடையாது.

நாங்கள் அவர்களோடு உறவாக இருந்த நேரத்திலேதான் மாநில சுயாட்சி கேட்டோம். மாநிலங்களுக்கு அதிக அதி காரங்கள் வேண்டுமென்றும் கேட்டோம்.

உறவாக இருந்த நேரத்தில்தான் பஞ்சாப் மாநில முதல் மைச்சரை அழைத்து, மாநில சுயாட்சி மாநாடு நடத்தினோம். 1971 தேர்தல் பிரகடனத்தில் மாநில சுயாட்சியை நம்முடைய குறிக்கோள்களில் ஒன்றாக வைத்தோம். இப்போது மாநில