உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

புள்ளிவிவரங்கள்

கொள்வோம். நீங்கள் பலவற்றைச் சொன்னீர்கள். அப்படிப் புள்ளிவிவரங்களைச் சொன்னால் மட்டும் போதாது. 9 படி மேலே சென்றுள்ள நாம் 4 படி வரை சுற்றியுள்ள இதர மாநிலங்களைப் பின்நோக்கிப் பார்க்க வேண்டியதில்லை. 9-வது படியிலிருந்து 10-வது படிக்கு எப்படிப் போவது என்று பார்க்க வேண்டும். அகில இந்திய ரீதியிலே எல்லா மாநிலங்களையும்விட எப்பொழுதுமே முன்னேறிய மாநிலமாக இருந்து வருவது சென்னை மாநிலம், தமிழ்நாடு மாநிலம், பிரிட்டிஷ்காரர்கள் காலத்திலிருந்து நிர்வாக ரீதியிலேயும் சரி, கிளர்ச்சி ரீதியிலேயும் சரி, இது முற்போக்கு மாநிலமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஆகவே, முற் போக்குப் பணிகளிலே இன்னும் வேகமாகச் செல்ல வேண்டிய அளவிற்குப் போகவேண்டும்.

சொல்லும்பொழுது

நிலச் சீர்திருத்தத்தைப்பற்றிச் அவர்கள் பழத்தோட்டங்களைப் பற்றிச் சொன்னார்கள். ஆனால் தென்னந் தோப்புகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அதைப்பற்றிச் சொல்லவில்லையே. குத்தகை நிலங்கள் சம்பந்தமாக நிலச் சொந்தக்காரர்கள் எத்தனை ஆண்டுக் காலத்திற்கு நீடிப்பது என்று கேள்விபோட்டோம். அதைப்பற்றிய கருத்துக்களை ஏன் சொல்லவில்லை? விவசாயத் தொழிலாளர் களின் கூலி பற்றிக் கமிட்டி போட்டிருக்கிறோம் என்று சொல் கிறீர்கள். ஆனால் இருக்கின்ற நிலைமையைப் பார்த்துக் கீழ்த் தஞ்சையில் உள்ளதைப்போல நிரந்தரமாக எல்லாப்பகுதி களுக்கும் அறிவித்து மறு அறிக்கை வரும்வரையில் செய்ய லாமே.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: விவசாயத் தொழில்களுக்காக இவ்வளவு கவலைப்படுகிறீர்கள். எல்லா தொழிலாளர்களுக்கும் போனஸ் குறைந்துவிட்டதே, அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

திரு. ஏ. ஆர். மாரிமுத்து: அதைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறோம், பிரதம அமைச்சர் அவர்களிடத்தில்.