378
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
கிறார்கள். அறிக்கை விட்டிருப்பது யார்? அதிகாரிகள். அதுவும் எப்படிப்பட்ட முறையில் என்றால், இது போன்ற தவறான அறிக்கைகளைக் கொடுத்து பொது அமைதியையும் சட்ட ஒழுங்கையும் குலைப்பது சரியில்லை. வெளியார் யாரும் கல்லூரி காம்பவுண்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று அறிக்கை வருகிறது. யார் இதை நமக்குத் தருகிறார்கள்? மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல் துறை அதிகாரியும் தருகிறார்கள். அரசியல்வாதிகள், அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டிய இது போன்ற அறிக்கைகளை அதிகாரிகள், அதுவும் பொது அமைதியும் சட்ட ஒழுங்கையும் பாதிக்கிற முறையில் அறிக்கை விடக்கூடாது என்று தலைவர்கள் நான் உள்பட சொன்னதைக் குறித்து அறிக்கை விடுகிறார்கள். இந்த முறை சரியா அல்லது முரண்பட்டதா என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும்.
தனியார்கள் யாரும் கல்லூரி காம்பவுண்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இது அதிகாரிகளுடைய கூற்று. ஆனால் கல்வியமைச்சர் திரு. அரங்கநாயகம் அவர்கள் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் மதுரையிலே மாணவர்கள் கிளர்ச்சி நடந்தபோது ஆயுதக் கிடங்கை தனியார் நால்வர் தாக்கி யிருக்கிறார்கள். அமளி நடந்த நேரத்திலே போலீசார் தனியார் நால்வரை கைது செய்துள்ளனர். இந்தத் தனியார் அந்த என்.சி.சி. ஆயுதக் கிடங்கை உடைத்திருக்கிறார்கள் என்று சொல்லியிருக் கிறார்கள், கல்லூரி காம்பவுண்டுக்குள் தனியாரை விடவில்லை என்பது அதிகாரிகளின் அறிக்கை.
ஆனால், அமைச்சருடைய அறிக்கை, தனியார் நால்வர் உள்ளே கைது செய்யப்பட்டார்கள் என்பதாகும். இதற்கொரு நீதி விசாரணை வேண்டுமென்றுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், இந்தச் சட்டமன்றத்திலே இருக்கின்ற வேறு பல கட்சிகளின் சார்பிலும் வேண்டுகோள் விடப்பட்டது. அறிக்கைகள் விடப்பட்டன. கழக ஆட்சிக் காலத்திலே அண்ணாமலை நகர் சம்பவத்திற்கும், பாளையங்கோட்டை மாணவர்கள் சம்பவத்திற்கும், கிளைவ் விடுதி மாணவர்கள் சம்பவத்திற்கும் நீதிவிசாரணை வைக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்தி மதுரையில் மாணவர்கள் மிகக் கொடுமையாகத்