உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

நேரத்திலே, திருச்சியிலே அங்குள்ள கழகத்தலைவர்கள் தலைமையிலே கழகத்தினர் கருப்புக்கொடியோடு நின்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால் திடீரென்று அதிகாரிகள் சொல்லுகின்றார்கள். நீங்கள் இங்கு கூடியிருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. கலைந்து செல்லுங்கள் என்று. “இல்லை, திடீரென்று நீங்கள் அறிவிக்கின்றீர்கள். நாங்கள் தடையை மீறுவதாக இருக்கிறோம்" என்று சொல்லுகின்றார்கள் கூடியுள்ள கழகத்தினர். அந்தக் கூட்டத்திற்கு இடையிலேயே கழகத் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். அங்கே அப்படிப்பட்டதொரு சூழ்நிலை ஏற்பட்டதால் அமளி உருவாகிறது. பின்னர் அந்த அமளியைத் தொடர்ந்து, போலீஸாருடைய வன்முறை, வெறியாட்டங்கள், அடக்கு முறை, தடியடி பிரயோகங்கள், கண்ணீர்புகை குண்டு வீச்சு என்று இப்படியெல்லாம் திருச்சியிலே நடைபெறுகின்றன.

மதுரை, திருச்சி பிறகு சென்னை, காஞ்சிபுரம் என்று எல்லா இடங்களுக்கும் தடை உத்திரவு என்கின்றார்கள். சென்னை நகரிலே எந்தெந்த இடத்திலே யார் யார் கருப்புக் கொடி காட்டுவதற்குத் தலைமை வகிப்பார்கள் என்று அறிவிக்கப் பட்டு இருக்கிறது. அவர்கள் கைது செய்யப்படுவார் களேயானால், அதற்குப்பிறகு கழகத்தின் தலைவர்களாகிய நாங்கள், நிர்வாகப் பொறுப்பில் உள்ள நாங்கள் தடையை மீறி கருப்புக்கொடி காட்டுவோம் என்று அறிவித்திருக்கின்றோம். நாங்கள் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டதாக போலீஸ் ஐ.ஜி அவர்கள்சொல்லுகின்றார்கள். அகற்றப்பட்டதாக அவர்கள் சொல்லுகின்றார்கள். இரவு 10 மணிக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், 'வீட்டிலிருந்த உங்கள் கார்களை வேண்டு மானால் வரச்சொல்லுங்கள், நீங்கள் எல்லாம் வீட்டிற்குச் செல்லலாம்' என்று அறிவிக்கின்றார்கள். அதற்குப்பிறகு, திடீரென்று 10-30 மணி அளவில், நீங்கள் கைது செய்யப் பட்டிருக்கின்றீர்கள் என்று சொல்லி, மறுநாள் மாஜிஸ்ட்ரேட்டு கோர்ட்டுக்கு அழைத்துச்செல்லுகின்றார்கள்

பதினான்கு செக்ஷன்கள் - சதி நடத்தினோம், இந்திரா காந்தி அவர்களைக் கொல்ல முயற்சிக்க சதி செய்தோம், என்ற