402
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
முடியும் என்ற சூழ்நிலை ஏற்படுகிற நேரத்தில் தம்பியாக இருந்தால் என்ன அண்ணணாக இருந்தால் என்ன! சிறையில் இருக்கிற சாதாரணக் கைதிகளைவிட கருணாநிதி எந்த வகையில் உயர்ந்தவர் என்று கேட்கிற அளவிற்கு சிறைச் சாலையில் எங்களை வைத்தது மட்டுமல்லாமல் எங்கள்மீது இப்படிப்பட்ட பாணங்களைப் பொழிந்து கொண்டேயி ருந்தார்கள்.
நான் கேட்கிறேன், நான் என்ன போலீஸ் ஸ்டேஷனுக்குப் படை எடுத்துச் சென்று அங்கே கைது செய்து வைக்கப்பட்ட தன் மகனை போலீஸ்காரர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு வந்தாரே ஆளும்கட்சி எம்.எல்.ஏ., அவரை விடப் பெரிய குற்றம் செய்தேனா?
நான் என்ன தேனாம்பேட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களைப் பிடிப்பதற்காக சென்ற போலீஸ் அதிகாரிகளை கட்டிப்போட்டு கத்தியால் குத்தி அவர்களைத் துன்புறுத்தினார்களே ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர்களைவிட பெரிய குற்றவாளியா நான்?
உங்களுடைய ஆறு மாத கால ஆட்சியில் சாதனைகளைச் சொல்வதற்குப் பதிலாக இப்படிப்பட்ட வேதனைகளைத்தான் தந்தீர்கள். கோப்புகளைப் பார்க்கிறோம், கண்ணீர் வடிக்கிறோம் என்று சொல்கிறார்கள், எங்கு பேசினாலும் ஊழல் ஊழல் என்ற பேச்சே தவிர அதைத் தவிர நீங்கள் வேறு எதுவும் பேசுவதில்லை. இந்த ஆறுமாத காலத்தில் எதிர்க்கட்சியினரை நீங்கள் தாக்குவதற்கு என்று பயன்படுத்திக்கொண்டிருக்கிற இந்த நேரத்தை நாட்டு மக்களுக்கு நல்ல காரியங்களைச் செய்வதற்குப் பயன்படுத்தியிருப்பீர்களேயானால் எங்களுடைய தூய்மையான ஒத்துழைப்பு உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்திருக்கும்.
குடகனாறு அணை உடைந்துவிட்டது என்றால் உடைந்தது அந்த அணை கட்டியதால்தான் உடைந்தது என்கிறார்கள். எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு! அவர்கள் கட்டியதால் அந்த ஆணை உடைந்தது என்கிறார்கள். அதுபற்றி ப.உ.ச. அவர்களும், பேராசிரியர் அவர்களும் விளக்கமாக,