கலைஞரின் சட்டமன்ற உரைகள்
419
நாங்கள் கொண்டு
வேறு ஒன்றும் அல்ல. அவைகள் வந்திருக்கிற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் திசை திருப்புகின்ற வகையிலே அமைந்திருக்கின்றனவே அல்லாமல் வேறு அல்ல. நான் எடுத்துச் சொன்னகுற்றச்சாட்டுக்களை நம்பிக்கையில்லா தீர்மானத்தை நீங்கள் ஆதரிக்காவிட்டாலும், அந்தக் குற்றச்சாட்டுக்கள் சரியானவைதான், அவைகளை இந்த அரசு ஆலோசித்து தக்க முறையிலே நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று அந்த நண்பர்கள் பேசியிருப்பார்களானால் நான் மெத்தவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
அவசரக்காலச் சட்டத்தை எதிர்த்ததைப் பற்றிச் சொன்னார்கள். 20 அம்சத் திட்டத்தை எதிர்க்கலாமா, 5 அம்சத் திட்டத்தை ஆதரிக்கலாமா என்று கேட்டார்கள். நான் இன்றைக்கும் சொல்கிறேன், 5 அம்சத் திட்டத்தை 20 அம்சத் திட்டத்தை நாங்கள் ஆதரிக்க தவறமாட்டோம். ஏனென்றால் 20 அம்சத் திட்டத்திலே சொல்லப்பட்ட விஷயங்களானாலும், 5 அம்சத் திட்டத்திலே சொல்லப்படுகிற விஷயங்களானாலும் அவைகள் எதுவும் புதிதாக இந்திரா காந்தி அம்மையார் அவர்களாலோ அல்லது அவர்கள் புதல்வர் சஞ்சய் காந்தி அவர்களாலோ அறிவிக்கப்பட்டு விட்ட திட்டங்கள் அல்ல. நம்முடைய நிதியமைச்சர் மனோகரன் அவர்கள், அந்த நேரத்திலே எடுத்துக் காட்டியதைப் போல சஞ்சய் காந்தியினுடைய ஐந்து அம்சத் திட்டங்கள் பெரியார் ராமசாமி அவர்களால் எடுத்துச் சொல்லப்பட்ட திட்டங்கள் என்ற அளவிலே, அதைப் போல, இந்திரா காந்தியாரால் எடுத்துச் சொல்லப்பட்ட 20 அம்சத் திட்டங்கள் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழக அரசால் இங்கே நிறைவேற்றப்பட்ட நடைபெற்று வருகிற திட்டங்கள் என்கின்ற வகையில்தான் இருக்கின்றன.
20 அம்சமானாலும், 5 அம்சமானாலும் இன்னும் 5 அம்சத்தைச் சேர்த்து, 30 அம்சமானாலும் எத்தனை அம்சங்க ளானாலும் மக்களுடைய நல்வாழ்வுத் திட்டங்களாக இருந்தால், பொருளாதாரத் திட்டங்களாக இருந்தால், அவைகளை திராவிட