கலைஞரின் சட்டமன்ற உரைகள்
421
“புரட்சித் தலைவரை பத்திரிகை நிருபர்கள் உடுப்பியில் சந்தித்தார்கள். அப்போது பிரதமரின் 20 அம்சத் திட்டத்தையும் சஞ்சய் காந்தியின் 5 அம்சத் திட்டத்தையும் ஒன்றாக இணைத்து 25 அம்சத் திட்டமாக அறிவித்திருக்கலாம் அல்லவா என்று நிருபர்கள் கேட்டனர். சஞ்சய் திட்டத்தில் கலாச்சாரப் புரட்சிக்கான கரு இருக்கிறதா என்றும் கேட்டனர்.
பிரதமர் இருபது அம்சத் திட்டத்தை அறிமுகப் படுத்தினார். சஞ்சய் காந்தி ஐந்து அம்சத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இவை இரண்டையும் ஒன்றாக அறிவித்திருக்கலாம் என்றார். ஏனெனில் எதிர்க்கட்சிகளுக்கு எந்த வகையிலும் எந்தப் பிரச்சாரத்திற்கும் இடம் கொடுத்து விடக் கூடாது என்பதில் புரட்சித் தலைவர் மிகக் கூர்மையாக இருக்கிறார். அவர் திட்டத்தை விமர்சிக்கவில்லை; எதிர்க்கவில்லை; ஆலோசனை - நல்ல நோக்கோடு கூறினார்.
மனச்சாட்சி, அரசியல் தெளிவு உள்ளவர்கள் இதில் என்ன தவறு காண்பார்கள்? இதற்காக சஞ்சய் காந்தியை எதிர்ப்பதாக சஞ்சய் காந்தியைப் பார்க்காத சின்னஞ்சிறார்கள் கூறுகிறார்கள்” என்று மனோகரன் அவர்கள் சொன்னார்கள். அவர் எப்பொழுதுமே மற்றவர்களை சின்னஞ்சிறார்கள் என்று வாடிக்கையாகக் கூறுவதைப் போல கூறியிருக்கிறார்.
,
அவர் மீண்டும் பேசுகிறார், “நான் மூன்று முறை சஞ்சய் காந்தியைச் சந்தித்திருக்கிறேன். புரட்சித்தலைவர் இரண்டு முறை சந்தித்திருக்கிறார். சஞ்சய் காந்தியின் கருத்துக்களை, திட்டங்களை, திறமையை புரட்சித்தலைவர் பாராட்டியிருக் கிறார். இளைஞராக உள்ள சஞ்சய் காந்தியை புரட்சி தலைவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. பிரச்சினையைப் புரிந்து, தெரிந்து வேகத்தோடு செயல்படுகின்ற சஞ்சய் காந்தியின் திறமை என்னைக் கவர்ந்தது" என்று புரட்சித் தலைவர் கூறினார். பெரியவர் பக்தவத்சலம் அனாவசியமாக வம்பை வளர்க்கிறார். அவருக்குக் கோபம் வருகிறது. சஞ்சய்காந்தியின் வளர்ச்சியைக் கண்டு புரட்சித் தலைவர் பொறாமைப் படுகிறாராம். சஞ்சய் காந்தியை இவர்கள் ஏமாற்ற முடியாது