உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

வேண்டியதில்லை. அன்றைக்கு அவசர காலச் சட்டத்தை கொண்டு வந்த போதே 'நன்று, நன்று' என்று சொல்லியிருந்தால் இன்றைக்கு அந்த அம்மையாரிடம் ஆளுகின்ற அண்ணா தி.மு.க. பெற்றிருக்கின்ற நற்சான்றினைவிட அன்றைக்கே அதிக நற்சான்றை நாங்கள் பெற்றிருக்க முடியும்.

ஒரு மாநிலத்தின் ஆளுங்கட்சியே அவசரகாலச் சட்டத்தை ஆதரிக்கிறதென்று பெருமைப்பட்டுக் கொண்டிருப் பார்கள். நாங்கள், அவசரகாலச் சட்டத்தை மறைமுகமாக ஆதரிக்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு இந்திரா காந்தியின் பதிலே போதுமானது என்று கருதுகிறேன். அவர்கள் என்ன சொன்னார்கள். இந்தியாவிலே எனக்கு எதிராக இரண்டு தீவுகள் இருக்கின்றன. ஒன்று தமிழ்நாடு; மற்றொன்று குஜராத் என்று சொல்லியதிலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகம் தனக்கு எவ்வளவு எதிர்ப்பாக இருக்கிறது என்பதை அவர்களே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

கறுப்புக் கொடி காட்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் திடீரென்று முடிவு எடுத்தது என்று ஒரு கேள்வி. இந்திரா காந்தி வருவதாக அறிவித்திருந்தபோது இங்கே பெருமழையாக இருந்தது; ஆகவே அவர் வருவார் என்பது நிச்சயிக்கப்படாமல் இருந்தது. அவர் நிச்சயமாக வருகிறார் என்று தெரிந்தவுடன்தான் திடீரென்று கழகத்தின் செயற்குழு கூடி முடிவெடுத்தது. இப்படிக் கழகம் கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தது அன்றைக்கு. அதற்கு மறுநாள்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கறுப்புக் கொடி காட்ட முடிவெடுத்தது. எப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மத்தியிலிருந்து ஜனதா கட்சியிடமிருந்து எந்தத் தூண்டுகோலும் வரவில்லையோ, அதே போல தி.மு.க.-விற்கும் மத்தியிலுள்ள ஜனதா கட்சிக்காரர்களிடமிருந்து எந்தத் தூண்டுதலும் வரவில்லை. மற்றவர்களுடைய தூண்டுதல் களால் காரியங்கள் செய்பவர்கள் அல்ல நாங்கள் என்பதை இங்கே தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

சர்க்காரியா பற்றி இங்கே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். சர்க்காரியா கமிஷனுக்கு குற்றச்சாட்டுகளைத் தந்தேன். ஜனாதிபதியினிடத்தில் தந்தேன்.