உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

475

தீக்கிரையாக்கப்பட்டு, அதேயிடத்தில் எழு பேர்களும் அதற்குப் பிறகு, மூன்று பேர்களும் ஆக மொத்தம் பத்துபேர்கள் கொல்லப்படுகிறார்கள். அதற்கு வழக்குப்பதிவு செய்யப்பட் டிருக்கிறது. நான் அரசாங்கத்தைப் பாராட்டுகிறேன். வழக்குப் பதிவு செய்ததற்காக. ஆனால், இப்படிப்பட்ட சம்பவங்கள் எல்லாம் நடைபெறுகிற அளவிற்கு இந்த அரசில் அங்கம் வகிப்பவர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்களாக இருப்பவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள். அமைச்சர் களாக இருப்பவர்கள் தங்களுடைய மேற்பார்வையில் நடை பெறுகிற பத்திரிகைகள் இவைகளையெல்லாம், இப்படிப்பட்ட சம்பவங்களைத் தூண்டிவிடுகிற அளவிற்கு செய்திகளை வெளியிடுவது குற்றமல்லவா? இன்னொன்றும் நான் கேட்க விரும்புகிறேன். நாகர்கோவிலில் நடைபெற்ற சம்பவத்திற்கு அங்குள்ள ஒரு ஐந்தாறு பேர்களைப் பிடித்து வழக்குப் போட்டிருக்கிறீர்கள். கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். இந்திரா காங்கிரஸ் நண்பர்கள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. ஒப்பிட்டுக் காட்டுவதற்காகச் சொல்கிறேன். நாகர்கோவிலில் பஸ் கொளுத்தியதுபோல் ஒரு சம்பவம் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய போராட்டத்தில் நடைபெற்றிருந்து, பத்து பேர்கள் செத்திருந்தால் இப்படி வழக்கு போடப்பட்டிருக்குமா? நாகர்கோவில் வட்டாரத்தோடு வழக்கு முடிந்திருக்குமா: நாகர்கோவிலுக்கு எடுத்துச் சொன்னவர் மதுரையில் இருக்கிற கட்சிச் செயலாளர். மதுரைக் கட்சிக் செயலாளருக்கு எடுத்துச் சொன்னவர் சென்னையில் இருக்கிற கருணாநிதி, அன்பழகன், சாதிக் பாட்சா. எனவே, இதில் ஒரு பெரிய சங்கிலித் தொடர்பு இருக்கிறது. ஆகவே போடு 500 பேர்கள் மீது வழக்கு என்று வெள்ளோட்டிலிருந்து ஆரம்பித்து சென்னை வரையில் உள்ள எங்கள் அத்தனை பேர்களையும் அழைத்து வழக்குப் போட மாட்டார்களா? அப்படியா போடுவோம் என்றா ஆச்சிரியப் படுகிறீர்கள்! போடாதவர்களா என்ன? இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் மதுரைக்கு வந்திருந்த நேரத்தில் சில அசம்பாவித நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வழக்கு இருக்கிற காரணத்தால் விவரங்களுக்குள் போக விரும்பவில்லை.

ஆனால் அது சதி, செயற்குழு கூடி சதி நடத்தப்பட்டு அந்தச் சதியின் காரணமாகத்தான் கருணாநிதியும் அன்பழகனும்