உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

497

தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட குழுவினால் 1978ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 3ஆம் நாளில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், நேர்முகத் தேர்வுக்கு வராத இராதாகிருஷ்ணன் என்பவர் அந்த அசிஸ்டன்ட் பப்ளிக் பிராசிகியூட்டர் கிரோடு 2 பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு கமிட்டி போட்டு, அந்தப் பதவிக்கு ஆள் நியமனம் செய்கிறார்கள். ஆனால் அசிஸ்டன்ட் பப்ளிக் பிராசிகியூட்டர் தேர்வுக்குழுவில் இன்டர்வியூவுக்கு போகாத இராதா கிருஷ்ணன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுகிறார். உடனடி யாக அரசுக் கடிதம் போகிறது. எல்.டிஸ். 20102/78, நாள் 1979ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 24-ம் நாளன்று. செங்கற்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் இராதாகிருஷ்ணனை அந்தப் பதவிக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும், அவருக்கு அந்தப் பதவி கொடுக்கக்கூடாது என்றும் அரசாங்கம் தெரிவிக்கிறது. இப்படி இன்டர்வியூவுக்குப் போகாதவரை அந்தப் பதவிக்கு எடுக்கக் கூடாது என்று 1979-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 24-ம் நாளில் அரசாங்கம் தெரிவிக்கிறது. அதற்குப் பிறகும் இராதாகிருஷணன் ஒழுங்குமுறைகளுக்கு மாறாக அசிஸ்டென்ட் பப்ளிக் பிராசிகியூட்டர் கிரேடு 2 ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது முறைதானா? இது எப்படி நடந்தது என்று அறிய வேண்டாமா? இடையிலே என்ன நடந்தது என்று கூற வேண்டாமா? இதற்கு இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் பயன்படாது என்று கருதிகிறீர்களா?

இன்னொன்றையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்நாட்டில் காலாகாலமாகப் போக்குவரத்துத் துறையில் பதவி உயர்வு கொடுப்பதில் அரசாங்கம் உத்தரவு போட்டிருந்தது. நம்முடைய மாண்புமிகு அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அந்தக் காலத்தில் கூட ‘ப்ரேக் இன்ஸ்பெக்டர்கள்' அதாவது 'மோட்டார் வேய்கிள்ஸ் இன்ஸ்பெக்டர்ஸ்' அவர்களுக்கும் சூப்பிரண்டு களுக்கும் பதவி உயர்வு கொடுக்க அரசு 1:1 என்ற முறையில்தான் உத்தரவு போட்டிருந்தது. அந்த முறையில்தான் கொடுக்கப்பட்டு வந்தது. இப்போது திடீரென்று ஒரு உத்தரவு. அந்த 1:1 உத்தரவு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்

17-க.ச.உ.(அ.தீ.) பா-2