உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

மேலும் தமிழ்நாட்டில் அமைதியான ஒரு சூழ்நிலை இந்த அரசுக்குத் தேவை என் பதை உணர்ந்து சில விஷயங்களுக்குத் தெளிவான பதிலை அளித்தாக வேண்டும். நயினார்தாஸ் காவல் துறை சங்கத் தலைவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையிலிருந்து அறிக்கை வருகிறது. எந்த நிலையில் இந்த அறிக்கை வருகிறது. அவரால் இந்த அறிக்கை கொடுக்கப்படவில்லை என்று சொல்லுகிறார்கள். அவரை வெளியில் விட்டால்தான் அறிக்கை விடவில்லை என்று மறுத்து விடுவார் என்று அரசின் சார்பில் வாதாடுகிறவர், இவரை வெளியே விட்டால்தான் இந்த அறிக்கையைக் கொடுக்கவில்லை என்று சொல்லி விடுவார் என்ற கருத்தைச் சொல்லி, அறிக்கை கொடுத்தது யார் என்கின்ற பேருண்மையை அவரை அறியாமலேயே குறிப்பிட் டிருக்கிறார். நயினார்தாஸ் இந்த நிலைமையை விளக்க வேண்டும். விளக்கமுடியாத அளவில் இன்றைக்கு இருக்கிறார். ஏனென்றால் அவரைப் பார்ப்பதற்கு இன்டர்வியூ மறுக்கப் படுகிறது. உற்றார் உறவினர்களுக்குக்கூட இன்டர்வியூ மறுக்கப்பட்டிருப்பதாக செய்தி வருகிறது. செய்தியாளர்கள் பார்ப்பதற்கும் இன்டர்வியூ மறுக்கப்பட்டது. இப்படி பல்வேறு பயங்கரமான சூழ்நிலை, நிலவிக்கொண்டிருக்கும்போது, முதலமைச்சர் இறுதியில் தருவார் என்கின்ற நிலைமை இல்லாமல், அவை முன்னவர் அவர்களே இதற்கான சில விளக்கங்களை தருவது, எங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் நல்லதாக இருக்கும் என்பதைச் சொல்லி, இதற்கான விளக்கங்களைச் சொல்லுவார்கள் என்று அவரிட மிருந்து எதிர்பார்க்கிறேன்.

கெட்டுவிடாமல் இருக்கவும்,