514
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
இன்னின்னார், இன்னின்ன வங்கிகளுக்கு இன்னின்ன
நிறுவனங்களுக்கு
நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்ன எம்.எல்.ஏ. அல்லது இன்ன அமைப்பாளர் என்ற அளவுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
நம்முடைய நண்பர் மாரிமுத்து அவர்கள் பேசும்போது ஊராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டதைப் பற்றிச் சுட்டிக் காட்டினார்கள். ஊராட்சி மன்றங்கள் ஒன்றல்ல; இரண்டல்ல. ஏதோ மதுரை மாநகராட்சி மன்றத்தினுடைய ஆயுளை நீடிக்கா மல் இருந்துவிடவில்லையா? சென்னை மாநகராட்சி மன்றத்தை கலைத்து விடவில்லையா என்று ஒன்றிரண்டு காரணங்களைக் காட்டிப் பேசிய, ஆளும் கட்சியினுடைய நண்பர்களுக்கு எடுத்துக்காட்ட நான் கடமைப் பட்டிருப்பதெல்லாம் ஒன்றல்ல, இரண்டல்ல; 12,000 ஊராட்சி மன்றங்கள் ஒரே உத்தரவின் மூலம் கலைக்கப்பட்டிருக்கின்றன. இந்த உத்தரவில் ஏற்பட்டிருக்கிற சில முரண்பாடுகளை நான் இங்கே எடுத்துக்காட்டுவது என்னுடைய கடமையாகும்.
அருமை
ஊராட்சி மன்றத் தலைவர்களுக்குச் செக் புத்தகங்களில் கையெழுத்துப் போடுகிற உரிமை உண்டு. முதலமைச்சர் அவர் களுக்குக்கூட கிடையாது. செக் புத்தகத்தில் கையெழுத்துப் போடும் உரிமை. வேறு எந்த அமைப்புகளிலேகூட அங்குள்ள தலைவர்களுக்குச் செக் புத்தகத்தில் கையெழுத்துப் போடும் உரிமை கிடையாது. ஆனால் ஊராட்சி மன்றத் தலைவருக்கு உண்டு. ஊராட்சி ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு, ஒரு சிற்றூரில் 50 ரூபாய்க்கு ஏதாவது செலவிட வேண்டும் என்றால், அந்தச் செக்கை வழங்கக்கூடிய உரிமை, செக்கில் கையெழுத்து இடக்கூடிய உரிமை, பிளாக் டெவலப்மெண்ட் ஆபீசருக்கு வருகிறது. ஒரு 50 ரூபாய்க்கு பல்ப் வாங்க வேண்டும் அல்லது அந்த ஊருக்கு வேறு ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால், அந்த 50 ரூபாய்க்கான காசோலையில் பிளாக் டெவலப்மெண்ட் ஆபீசர்' கையெழுத்து இட வேண்டும். அதைத் தணிக்கை செய்வது யார் என்று பார்த்தால், நிர்வாகத்திலே எவ்வளவு முரண்பாடு என்று தெரிகிறது. அதை எக்ஸ்டென்ஷன் ஆபிசர் ஆப் பஞ்சாயத்து, இ.ஓ.பி. என்று சொல்லப்படுபவர் தணிக்கை செய்கிறார். அவர் பிளாக்