உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

என்று அதிலே குறிப்பிடப்பட்டு முதலில் கொடுக்கப்பட்ட அபிடவிட்டை விசாரித்தவர்கள் பார்க்கிற நேரத்தில் அதிலே 8ஆம் தேதி என்று போடப்பட்டிருந்த அந்தத் தேதியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரோ அல்லது செயலாளர்களோ அதை மாற்றி, அந்தத் தேதியை 9ஆம் தேதி என்று திருத்தியிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய, ஆங்கிலத்தில் சொல்வதானால் 'ப்ராட்' என்பதை எண்ணிப் பார்த்திட வேண் டும். செப்டம்பர் 12ஆம் தேதி மருத்துவக் கல்லூரி மாண வர்கள் யார் யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்கிற பட்டியல் வெளியாகி விடுகிறது. அதற்குப் பிறகு நம்முடைய முதல் அமைச்சர் அவர்கள் ஒரு உத்தரவு போடுகிறார்கள். தமிழில் அந்த உத்தரவு போடப்பட்டிருக்கிறது. எப்போது தெரியுமா? செப்டம்பர் 12-ம் தேதி மருத்துவக் கல்லூரி மாணவர்களுடைய பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு 6-10-1979, அடுத்தமாதம் ஒரு உத்தரவு பிறக்கிறது. என்ன அந்த உத்தரவு. அந்த உத்தரவின்படி கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கு 6 இடங்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வரும் தமிழ் மாணவர்களுக்கும், மாணவியருக்கும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் 6 இடங்கள், விளை யாட்டுச் சாதனைகளை ஏற்படுத்திய மாணவ மாணவியருக்கு மூன்று இடங்கள், ஆக, ஆறு ப்ளஸ் ஆறு ப்ளஸ் மூன்று 15 இடங்கள்.

1015 இடங்கள் என்று அறிவிக்கப்பட்டு, அதில் தேர்வு எழுதி அல்லது இன்டர்வியுக்கு மாணவர்கள் வந்து அந்த பட்டியல் செலக்ஷன் கமிட்டியால் நிறைவுசெய்யப்பட்டு அந்தப் பட்டியல் செப்டம்பர் மாதம் வெளியிட்ட பிறகு 12-8-79இல் வெளியிட்ட பிறகு 6-10-79 அன்று ஒரு உத்தரவு வருகிறது. அந்த 6-10-79 உத்தரவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குறிப்பு எழுதுகிறார். முதலமைச்சரும் குறிப்பு எழுதுகிறார். அந்த உத்தரவு வருவதற்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு அருமையான கருத்தை அதாவது விளையாட்டுப் போட்டிகளில் நல்ல திறமையாக இருப்பவர்களுக்கு 3 இடங்கள் ஒதுக்க வேண்டும். அமெரிக்க ஐக்கியநாடுகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு ஆறு இடங்கள் ஒதுக்க வேண்டும், கலப்புத் திருமணம் செய்து