520
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
13-10-79இல் கையெழுத்து போட்டதை 13-9-79 என்று திருத்தி, 13-10-79 என்பது 13-9-79 ஆக திருத்தப்பட்ட பிறகு, 13-9-79, 27-9-79, 29-9-79, 3-10-79 என்றெல்லாம் அந்தப் பைலில் வந்து, அதில் கீழே குத்தப்பட வேண்டிய முதலமைச்சருடைய அலுவலகத்தின் முத்திரை குத்தப்பட்டு, இப்படிப்பட்ட ஒரு பைல் வருகிறது. நான் கேட்பதெல்லாம், இதிலே 13-10-79 என்பது 13-9-79 என்று திருத்தப்பட வேண்டிய காரணம் என்ன? அதைப்போலவே பட்டியலில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் 9ஆம் தேதி, செப்டம்பர் 9ஆம் தேதி கையெழுத்திட்டதாகச் சொல்லப்பட்டு, பின்னால் விசாரணை மண்படத்தில் 8ஆம் தேதி என்று சொல்லிவிட்டு, பின்னால் 9 என்று திருத்தப்பட வேண்டிய காரணம் என்ன?
இவைகளுக்கு மேலாக 1,015 இடம் என்று மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அட்மிஷன் என்று அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் ஏன் இப்படிப்பட்ட, கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுடைய குடும்பங்களிலுள்ள பிள்ளைகள், அமெரிக்க ஐக்கிய நாட்டு தமிழர்களுடைய பிள்ளைகள், விளையாட்டுகளில் சாதனைகள் ஏற்படுத்தியவர்கள் இவர் களெல்லாம் சேர்க்கப்படுவர் என்று அறிவிக்கப்படவில்லை? தமிழர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மாத்திரம்தான் இருக்கிறார்களா? இங்கிலாந்தில் இல்லையா? வேறு நாடுகளில் கிடையாதா? ஆகவே இது அமெரிக்க ஐக்கிய நாட்டு தமிழர்களுக்கு அல்ல, இவைகள் எல்லாம் அமெரிக்க ஐக்கிய நாட்டு கோட்டாவா? அல்ல, அன்பர் மணியன் கோட்டாதான் என்று நாட்டில் எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். (தி.மு.க. உறுப்பினர்கள் தரப்பி லிருந்து ஆரவாரம்...)
அடுத்தபடியாக, 8-6-79 அன்று தமிழக அரசு பொதுத் துறை ஒரு ரகசிய சுற்றறிக்கையை அரசாங்கத்தின் அனைத்து அலுவலகத்திற்கும் அனுப்பியிருக்கிறது. பொதுத்துறை என்பது அரசாங்கத்தில் மிகவும் ரகசியமான துறை. அந்தத் துறை இருக்கின்ற அறைக்குப் பக்கத்தில் யாரையும் அனுமதிக்க
மாட்டார்கள்.