540
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
அண்ட் மெக்கன்சி மெக்கன்சி கம்பெனி கம்பெனி எச்.எம்.சிங் அவர்களுக்கு டெலக்ஸ் அனுப்புகிறார்கள். இங்கே பாருங்கள் வேடிக்கையை. 10.75 மில்லியன் டாலருக்குக் டாலருக்குக் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதை வாங்கலாம் என்று முடிவு எடுக்கப் பட்டுப் பிறகு எக்காரணத்தை முன்னிட்டும் 11 மில்லியன் டாலராக மாறாது என்று உறுதி அளிக்கப்பட்டுப் பிறகு 11.75 மில்லியன் டாலராக அந்தக் கம்பெனிக்கு விலை பெருகி 3வது நாள் 13.5மில்லியன் விலையை உயர்த்திக் கேட்கின்ற காரணத்தால் அதிகமான கமிஷன் ஏறத்தாழ 4 கோடி ரூபாய்க்கு இடையில் உள்ளவர்கள் சுருட்டித் தாங்களே எடுத்துக் கொண் டது போக, முதலமைச்சருக்கும் பங்கு போட்டுக் கொடுக்க ஒரு பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது என்ற குற்றச் சாட்டை நான் இங்கே சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
ஆனால், இதை எச்.எம்.சிங் ஏற்றுக் கொண்டாரா என்றால் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் சில பாயிண்ட்களைக் குறிப்பிடுகிறார். என்ன குறிப்பிடுகிறார்? இந்தப் பூம்புகார் கார்ப்பரேஷன் சேர்மென் இதை எல்லாம் ஆராய்ச்சி செய்து, பிளஸ் பாயிண்ட், மைனஸ் பாயின்ட் இவைகளை எல்லாம் பல்கேரியா கப்பலோடு, ஏற்கெனவே ஜெர்மனியிலே விலை பேசிய கப்பலோடு ஒப்பிட்டு 8-2-1979ம் தேதிய கடிதத்திலே குறிப்பிடுகிறார்.
இந்த விலையை மத்திய அரசு ஒத்துக் கொள்ளாது. மேலும் ஏற்கெனவே நாம் மேற்கு ஜெர்மானியிலிருந்து வாங்கியிருந்த பால்டிகா டைப் கப்பலோடு ஒப்பிட்டு அதனுடைய இயந்திரங்களும் மற்றவைகளும்; அவைகளை விட தரக் குறைவானவை என்று குறிப்பிட்டு, அந்த விலைக்கு வாங்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
"In the light of the above, Government of india may not allow us to purchase the vessels at a higher price when we negotiated for the baltika type vessels, particularly when the machinery in the engine room has distinct negative point when compared to the baltica type vessels.
இவ்வாறு எச்.எம்.சிங் பாங்கோ அவர்களுக்கு இதன் பின்னால் மறைந்து கிடக்கும் ஊழலை மிக நாசுக்காக வெளிப்