உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

549

உடனேயே அமைச்சரவை கூடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இன்னொரு ஆஃபர் தரப்படுகிறது. பல்கேரியா கப்பலை விட அனுகூலமாகத் தயாரிக்கப்படுகிறது இந்த ஆஃபர். ஆனால் உண்மை நிலை என்ன? இது ஒரு போகஸ் ஆஃபர். இதை நான் சொல்லவில்லை. பூம்புகார் கார்ப்பரேஷன் மானேஜிங் டைரக்டர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமகிருஷ்ணன் சொல்லுகிறார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடுகிறார்...

"I have no doubt whatsoever in my mind that the offer regarding the Polish vessel from Messrs. Flaudlines is a bogus one... என்று போகஸ் என்று குறிப்பிடுகிறார், மேலும் மனம் நொந்து எழுதுகிறார்...

"Even though as the Managing Director of the Poombuhar Shipping Corporation, I am bound to send the message to the Shipping Development I and Commitee, as desired by the Cabinet. I would like this letter of mine to be on record as having been given before the unfortunate and irrevocable step was taken."

அவர் எழுதுகிறார், பூம்புகார் கார்ப்பரேஷன் மானேஜிங் டைரக்டர் என்ற முறையில் நான், எஸ்.டி.எப்.ஸிக்கு (S.D.F.C) டெல்லிக்கு அமைச்சரவையின் முடிவை தெரிவிக்கக் கடன் பட்டவனாக இருந்தாலும், இந்தத் துர்ப்பாக்கியமானதும், மாற்ற இயலாததுமான இந்த நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு இந்தக் கடிதத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். இது அப்போது தலைமைச் செயலாளராக இருந்த பணிக்கருக்கு எழுதப்பட்ட கடிதம். 7ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம். இந்தக் கடிதத்திற்குப் பிறகு அரசாங்கம் தன்னுடைய மனதை மாற்றிக் கொள்வதற்காக ல்லை. பிறகு 9-ஆம் தேதி ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் சுப்பியால் சொல்லப்படுகின்ற கம்பெனிகள் அவ்வளவும் போகஸ் மோசடியானவை என்பதையெல்லாம் குறிப்பிட்டுவிட்டு அப்படிப்பட்ட போலந்து கப்பல்களே இருக்கின்றனவா என்கின்ற சந்தேகம் இருக்கிறது. அந்தக் கப்பலும் இல்லை. விற்பனை செய்கின்ற கம்பெனியும் இல்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது. அப்படியானால், அந்தப் போலந்து கப்பல்களை உள்ளே திணிப்பானேன்? அதற்கும் ராமகிருஷ்ணன், மானிஜேங் டைரக்டர் பூம்புகார் கார்ப்பரேஷன். எழுதுகிறார்...