உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

585

உரை : 84

ராஜாஜிக்கு இரங்கல்

நாள் : 03.02.1973

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவரவர்களே, பேரவையின் முன்னவர் அவர்கள் கொண்டுவந்துள்ள இரங்கல் தீர்மானங்களையொட்டி அனைத்துக் கட்சிகளைச் சார்ந்தவர்களும் கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். மறைந்த பெரியவர், மூதறிஞர் இராஜாஜி அவர்கள் இந்த நாட்டின் கருவூலமாகவும், இந்தியப் பெருநாட்டில் மட்டுமல்லாமல் அனைத்துலக நாடுகளின் அன்பையும், மரியாதையையும் பெற்றவர்களாகவும் திகழ்ந்தவராவார்கள். அவர்களுடைய மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதனை நாம் உணர்கின்றோம்.

தன்னுடைய வாழ்நாளில் மிகப்பெரும் பகுதியை பொதுவாழ்விற்காக வழங்கிவிட்டு, அந்தப் பொதுவாழ்விலே மிகுந்த துணிச்சலான கருத்துக்களையெல்லாம் நாட்டிற்கு எடுத்துச் சொல்லியவர்களாகவும், சொன்ன கருத்துக்களைச் செயற்படுத்திக் காட்டியவர்களாகவும், கருத்து மாறுபாடுகள், கட்சி மாச்சர்யங்கள் எவ்வளவுதான் குறுக்கிட்டாலும் அவைகள் மற்றவர்களோடு பழகுவதற்கு, நட்புரிமை காட்டுவதற்கு இடையூறாக இருத்தல் ஆகாது என்ற உயர்ந்த பண்பைக் கடைப்பிடித்தவர்களாகவும் மறைந்த இராஜாஜி அவர்கள் விளங்கினார்கள். அவர்களுக்கும், உத்தமர் காந்தியாருக்கும் இருந்த தொடர்பினையும், பண்டித ஜவஹர்லால் நேருவிற்கும், இராஜாஜி அவர்களுக்கு இருந்த நட்பினையும், இந்தியாவினுடைய தேசியப் போராட்ட இயக்கத்திலே கலந்த கொண்ட கடமை வீரர்களுக்கும், இராஜாஜி அவர்களுக்கும் இருந்த தொடர்பினையும் இங்கு பேசிய அனைவரும்

குறிப்பிட்டிருக்கிறார்கள்.