உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : அவர்களுடைய பாலிசி அப்படி. வொர்ல்டு பாங்கு கவர்ன்மெண்டுக்குப் பணம் கொடுக்க மாட்டார்கள். கவர்ன்மெண்டுக்கு கவர்ன்மெண்டு லோன் கொடுக்கிறார்கள். வொர்ல்டு பாங்கு ப்ரைவேட் எண்டர்பிரைசுக்குத்தான் கடன் கொடுக்கிறார்கள்.

கலைஞர் மு. கருணாநிதி : நமது பொதுத் துறையை பற்றி, அவர்கள் அவ்வாறு கருதுகிறார்கள் போலும், அடுத்து, சேலம் மாக்னசைட் ஏறத்தாழ 99 வருஷ காலம் வெள்ளைக்காரனிடத்திலே குத்தகைக்கு இருந்தது. அது நல்ல லாபகரமான தொழில், குத்தகை காலம் முடிந்ததும் அதை ஒப்படைக்கிற நேரத்தில் அந்தத் தொழிலைப் பொதுத்துறையில் சர்க்காரே ஏற்று நடத்தி இருக்கலாம். அதற்குப் பதிலாக கல்கத்தா பர்ன் அண்டு கம்பெனிக்கு, தனியார் துறைக்கு, சேலம் மாக்னசைட்டை நடத்துகிற உரிமை கட்டிடங்கள், மெஷினரிகள் உட்பட மூன்று கோடி ரூபாய் விலைக்கு விற்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதன்மூலம் சர்க்கார் ஆண்டு தோறும் அடையவேண்டிய லாபத்தை இழந்திருக்கிறது என்பதை இந்தச் சந்தர்பத்தில் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

கூட்டுறவு ஸ்பின்னிங் மில்கள் ஏறத்தாழ 10 மாவட்டங்களில் இருக்குமென்று வைத்துக்கொண்டால் ஒரு ஸ்பின்னிங் மில்லுக்கு போட வேண்டிய மூலதனம் 50 இலட்சம் ரூபாய். எல்லா ஸ்பின்னிங் மில்களுக்கும் தேவையான அளவுக்கு மெஷினரிகள் வாங்க கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய முதலீடு செய்யப் பட்டிருக்கிற ஸ்பின்னிங் மில்களுக்குத் தொடர்பு கொண்டிருக்க வேண்டிய இலாகா அதிகாரிகள் ஒன்று டைரக்டர் ஆப் இன்டஸ்ட்ரிஸ் ஆக இருக்கவேண்டும் அல்லது கூட்டுறவு ரிஜிஸ்ட்ராராக இருக்கவேண்டும். ஆனால் இந்தத் தொடர்பு இன்று டைரக்டர் ஆப் ரிஜிஸ்ட்ராரிடமும் இல்லை; கூட்டுறவு ரிஜிஸ்ட்ராரிடத்திலும் இல்லை; இந்தத் தொடர்பு டைரக்டர் ஆப் ஹாண்ட்லூம்ஸ் என்ற பதவியோடு ஒட்டவைக்கப்பட்டிருக் கிறது. அதற்கு காரணம் அதன் தலைவர் மகாதேவன், ஐ.ஏ.எஸ். அவர்கள் அமைச்சர் வெங்கட்டராமன் அவர்களுக்கு மிக வேண்டியவர் என்று சொல்லப்படுகிறது.