602
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
அவருக்கு ஏற்பட்ட பெருமைகளைவிட அவர் விரும்பிய பெருமையாக, நாடு என்றென்றும் நினைத்துக் கொண்டிருக்கின்ற பெருமையாக, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவர் பங்கு கொண்டதும், தொடர்ந்து ஹைதராபாத் நிஜாம் அவர்களுடைய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியதும், அதன் காரணமாக இளமைப் பருவத்திலேயே அவர் சிறை சென்றதும், அதற்குப் பிறகும்கூட தெலுங்கானா போராட்டத்திற்காக அவர் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, அதற்கென ஒரு தனி இயக்கமே கண்டு, அந்த இயக்கத்தின் சார்பில் 1968-69 ஆம் ஆண்டுகளில் அவர் போராடி, அந்தப் போராட்டத்தின் பலனாக மத்திய அரசே முன்வந்து தெலுங்கானாவுக்கு அவர் கோரிய உரிமைகளை விட்டுத்தர சம்மதித்தும், அவருடைய வாழ்க்கையிலே பொன்னான ஏடுகள் ஆகும், புரட்சிகரமான ஏடுகளாகும்.
அவர் தமிழகத்திலே ஆளுநராகப் பொறுப்பேற்றிருந்த நேரத்தில் இந்த அரசு உருவானபோது அவர் அடைந்த அந்த மகிழ்ச்சியை, தொடர்ந்து அவர் அடைந்திடக்கூடிய நிலை இல்லாமல் இடையிலே தடைப்பட்டுவிட்டது உள்ளபடி யே நமக்கெல்லாம் பெரும் சோகமாகும்.
அவரை பஞ்சாப் கவர்னராக, உத்திரப்பிரதேச கவர்னராக, இராஜஸ்தான் கவர்னராக கண்டபோது, நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதைப்போல, கவர்னர் பதவி தேவையில்லை என்ற அந்தக் கருத்துக்கு மாற்றாக அவருடைய வாழ்க்கை முறை, செயல்முறை அவர் பதவி வகித்த அந்தப் பண்பு, இவைகள் எல்லாம் விளங்கின என்று எண்ணத்தக்க நிலையில் அவர் அங்கெல்லாம் பெரும்புகழ் பெற்றார். அதிலும் குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்திலே அந்தக் காலக்கட்டடத்திலே கவர்னர் பொறுப்பை ஏற்பதும், ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதும் சாதாரணமான காரியம் அல்ல. அதைப்போலவே, உத்திரப் பிரதேசத்தில் அவர் கவர்னராக இருந்தபோது எல்லா மாவட்டங்களுக்கும் அவர் சுற்றுப்பயணம் செய்ததும், மக்களுடைய பிரச்சினைகளை நேரடியாக கவனித்ததும் இந்தியா முழுவதும் போற்றிய செயல்கள் ஆகும் லக்னோவிலிருந்து வெளி வந்த ஒரு இந்திப் பத்திரிகையில் அவரைப் பற்றி எழுதும் போது "A restless swimmer in the ocean of comfors and honour"