உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

607

தங்க பாண்டியன் மறைவுக்கு இரங்கல்

உரை : 89

நாள் : 13.10.1997

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அவை இரண்டு தங்கங்களை இழந்து இருக்கிறது. ஒன்று தங்கபாண்டியன். மற்றொன்று தங்கவேல். தங்கவேல் அவர்கள் நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியிலே இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த அவையில் அவருடைய தொகுதி மக்களுக்காகவும் தமிழ்நாட்டு மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர். மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து, தமிழகத்திலேகூட அல்ல, இலங்கையிலே பிறந்து, தமிழகத்திலே வாழ்ந்து, தமிழக மக்களோடு ஒன்றிக்கலந்து குறிப்பாக குன்னூர் தொகுதி மக்களுடைய சேவகனாக பணியாளனாக, உத்தம ஊழியனாக அருந்தொண்டாற்றியவர். அவருடைய மறைவால் துடித்துத் துவண்டு இருக்கின்ற அந்தக் குடும்பத்தாருக்கு இந்த அவையின் சார்பில் செலுத்தப்படுகின்ற இரங்கலில் நானும் என்னுடைய இதயத்தை இணைத்துக் கொள்கின்றேன்.

மற்றொரு அதிர்ச்சியாக, இந்த அவையில் அமைச்சராக வீற்றிருந்தவர், என்னுடைய தம்பிகளிலே ஒருவராக இடம் பெற்றிருந்தவர், இந்த இயக்கத்தின் தளபதியாகக் கடமை யாற்றியவர், கழகம் கட்டளை இட்டபோதெல்லாம் களம் சென்றவர். குறிப்பாக நெருக்கடி காலத்திலே மிசா கைதியாக ஓராண்டு காலம் அடைபட்டு அடக்குமுறையை ஏற்றவர், தங்கபாண்டியன் அவர்கள். இங்கே உரையாற்றிய எல்லாக் கட்சிகளினுடைய தலைவர்களும் தலைவர்களும் எடுத்துக்காட்டியதைப் போல, எல்லோருக்கும் இனியவராக, நல்லவராக,

அதே